Sunday, 28 January 2018

பொதுத்தமிழ்


1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? - குறிப்பறிதல்.

2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் ? - கரிகாலன்

3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் ? - திரு.வி.க.

4. 'திருமகள்" இதழின் ஆசிரியர் யார் ? - கவியரசு கண்ணதாசன்

5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது ? - மதுரை.

6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் ? - வேதநாயகம்பிள்ளை.

7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் ? - நல்லூர் நத்தத்தனார்

8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்

9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல்

10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ? - மணிமேகலை

11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் ? - நாமக்கல் கவிஞர;

12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர்? - வையாபுரி பிள்ளை

ஹைட்ரஜன்-சில குறிப்புகள்


* மிக லேசான தனிமம் ஹைட்ரஜன்.
* ஹைட்ரஜனின் அணு எண் 1.
* புரோட்டியம், டியூட்ரியம், டிரிடியம் என்பவை ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்.
* புரோட்டியம், ஒரு புரோட்டான் மட்டும் கொண்டது.
* டியூட்ரியம், ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்டது.
* டிரிடியம் ஒரு புரோட்டான், 2 நியூட்ரான்கள் கொண்டது.
* இயற்கையில் அதிகம் காணப்படுவது புரோட்டியம் 99.98 சதவீதம்.
* டியூட்ரியம் இயற்கையில் 0.015 சதவீதம் உள்ளது.
* டிரிடியம் மிக மிக அரிதானது, நிலைத்த தன்மையற்றது. ஹைட்ரஜனுக்குப் பெயரிட்டவர் லவாய்ஸியர்.
* ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் ஹேவண்டிஸ்.
* ஹைட்ரஜனுக்கு ஹேவண்டிஸ் வைத்த பெயர் எரியும் வாயு.
* ஹைட்ரஜன் என்பதன் பொருள் தண்ணீரை உருவாக்குவது.
* டியூட்ரியம் ஆக்சைடு என்பது கனநீராகும்.
* கனநீர் அணு உலைகளில் நியூட்ரான் வேகத்தை கட்டுப்படுத்தும் தணிப்பானாக பயன்படுகிறது.
* ஹைட்ரஜனின் எரிசக்தி 32 கலோரிகள்.
* எதிர்கால எரிபொருள் தேவையைச் சமாளிக்க ஹைட்ரஜனே அதிகம் உதவும்.

விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்கள்


விவசாயத்தில் முன்னிலை | சில விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்களை அறிந்து கொள்ளலாம்...
 1. நெல் - மேற்கு வங்காளம்
 2. கோதுமை - உத்திரப்பிரதேசம்
 3. கம்பு, சோளம் - மகாராஷ்டிரா
 4. கேழ்வரகு - கர்நாடகா
 5. கரும்பு - உத்திரப்பிரதேசம்
 6. புகையிலை - ஆந்திரப் பிரதேசம்
 7. பருத்தி, நிலக்கடலை - குஜராத்
 8. தேயிலை - அஸ்ஸாம்
 9. ரப்பர் - கேரளா
 10. காபி - கர்நாடகா
 11. பருப்பு வகைகள் - மத்திய பிரதேசம்
 12. தேங்காய் - கேரளா
 13. சணல் - மேற்கு வங்காளம்
 14. நறுமணப் பொருள்கள் - கேரளா

இந்திய தேசிய இயக்கம் - மிதவாதிகள் காலம்


* இந்திய தேசிய இயக்கம் 3 கட்டங்களைக் கொண்டது. அவை மிதவாதிகள் காலம், வீரத்தை நம்பியவர்கள் காலம், காந்திசகாப்தம் என அழைக்கப்படுகின்றன.
* மிதவாதிகள் காலம் 1885 முதல் 1905 வரை என்று வரையறை செய்யப்படுகிறது.
* 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை மும்மபயில் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம். இவர் ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரி.
* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி.
* இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் 1885-ல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 72 பேர், 'பிரேவ் 72' என அழைக்கப்பட்டனர்.
* காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாம் மாநாடு 1886-ல் கொல்கத்தாவில் நடைபெற்றது.
* மிதவாதிகளின் தலைவர் கோபாலகிருஷ்ணகோகலே.
* மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோகலே.
* கோகலே இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவினார்.
* 1887-ல் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் காங்கிரஸ் கூட்டத்தின் தலைவர் பத்ருதீன் தியாப்ஜி.
* காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் பதவி வகித்த முதல் ஆங்கிலேயர் ஜார்ஜ் யூல் (1904).

பொது அறிவு | வினா வங்கி


பொது அறிவு | வினா வங்கி 

1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது?

2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார்?

3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ஏவிய முதல் நாடு எது?

4. ஐ.நா. தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?

5. பென்சிலின் மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?

6. உலகில் முதன் முதலில் உயில் எழுதும் முறையை ஆரம்பித்தவர்கள் யார்?

7. விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தி தருவது எது?

8. காற்றின் ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?

9. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது?

10. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது?

11. முதன் முதலில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியவர் யார்?

12. நெருப்பை அணைக்கப் பயன்படும் வாயு யாது?

13. கியூலெக்ஸ் கொசுக்கள் பரப்பும் வியாதி எது?

14. உலகின் முதல் பெண் இயக்குனர் யார்?

15. பறவைகளின் இறகுகளை நீரில் நனையாமல் காக்கும் சுரப்பி பொருள் எது?

16. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி செயலகம் எங்கு அமைந்துள்ளது?

17. பழனியின் பண்டைய காலப் பெயர் என்ன?

18. பயோனியர் விண்கலம் எந்த கிரகத்திற்கு அனுப்பப்பட்டது?

19. சணல் தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலம் எது?

20. டிப்தீரியா வியாதி எந்த உடலுறுப்பை தாக்கும்?

 விடைகள் : 

1. புலிகட் ஏரி, 2. வீரமாமுனிவர், 3. ஜெர்மனி, 4. அக்டோபர் 24, 5. ஒருவகை காளான்கள், 6. ரோமானியர்கள், 7. குளுக்கோஸ், 8. ஹைக்கோ மீட்டர், 9. திருவனந்தபுரம், 10. கைபர் கணவாய், 11. சாரன்ஜிலாரி (பிரான்ஸ்), 12. கார்பன்-டை- ஆக்சைடு, 13. யானைக்கால், 14. ஆலிஸ்கைபிரான்ஸ், 15. பிரீன் சுரப்பி, 16. புதுடெல்லி, 17. வையாபுரி, 18. வியாழன், 19. மேற்கு வங்காளம், 20. தொண்டை

Saturday, 27 January 2018

CURRENT AFFAIRS 2018-01-13-19 | கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு


கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | 
 • சென்னையில் உள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் வீடு, டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். (ஜனவரி 13)
 • தமிழகத்தில் டெல்டா பயிர்களை காப்பாற்ற காவிரியில் உடனடியாக 7 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். (ஜனவரி 13)
 • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மோதலில் சமரச முயற்சியில் பார் கவுன்சில் இறங்கியது. இதுதொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. (ஜனவரி 13)
 • அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் மீது அவதூறு கருத்து கூறினார் என்ற குற்றச்சாட்டால் டிரம்புக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போர்க்கொடி தூக்கின. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. (ஜனவரி 13)
 • எழுத்தாளர் ஞாநி சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. ஞாநி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். (ஜனவரி 15)
 • இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நேட்டன்யாஹூ, பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகள் இடையே வேளாண்மை, விமானப் போக்குவரத்து உள்பட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (ஜனவரி 15)
 • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஜனவரி 15)
 • நியூசிலாந்தின் மான்கானுய்யில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. (ஜனவரி 15)
 • ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 38 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 90 பேர் படுகாயம் அடைந்தனர். (ஜனவரி 15)
 • டிசம்பர் மாதத்தில் கம்பி, தகடு உள்ளிட்ட உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி 9.64 லட்சம் டன்னாக உயர்ந்தது. (ஜனவரி 15)
 • புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. (ஜனவரி 16)
 • உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 571 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவை முட்டியதில் 40 வீரர்கள் காயமடைந்தனர். (ஜனவரி 16)
 • நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். (ஜனவரி 16)
 • டிசம்பர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 12 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1488 கோடி டாலராக அதி கரித்தது. (ஜனவரி 16)
 • உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். (ஜனவரி 16)
 • ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம் : ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாப்புவா நியூ கினியாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. (ஜனவரி 16)
 • 4 நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி சந்திப்பு : தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 4 சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்தித்து உரையாடினார். ஆனால், பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று அட்டார்னி ஜெனரல் கூறினார். (ஜனவரி 16)
 • கடந்த 2017-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் மத்திய அரசுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி அன்னியச் செலாவணி வருவாய் கிடைத்தது. (ஜனவரி 17)
 • ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுகோய் போர் விமானத்தில் பறந்தார். தனது 45 நிமிட போர் விமான பயணம் அற்புதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். (ஜனவரி 17)
 • திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவில் 27-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே. ஜோதி அறிவித்தார். (ஜனவரி 18)
 • 'பத்மாவத்' திரைப்படத்துக்கு ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. (ஜனவரி 18)
 • அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த 'அக்னி-5' ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. (ஜனவரி 18)
 • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுரேஷ் குண்டு பாய்ந்து பலியானார். (ஜனவரி 18)
 • எதிர்வரும் 2018- 2019 மத்திய பட்ஜெட்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு கணிசமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. (ஜனவரி 18)
 • டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மேலும் 29 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. (ஜனவரி 18)
 • கடந்த ஆண்டின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தேர்வு செய்தது. ஐ.சி.சி. கனவு டெஸ்ட், ஒருநாள் போட்டி அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார். (ஜனவரி 18)
 • மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தையும் சேர்த்து கேள்வித்தாள்களைத் தயாரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். (ஜனவரி 18)
 • தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆக அதிகரிக்கப்பட்டது. (ஜனவரி 19)

Thursday, 25 January 2018

தகவல் களஞ்சியம்-டெல்லியின் பழைய பெயர் ஷாஜகானாபாத்.


* தமிழக சட்டசபையில் உறுப்பினராக நுழைந்த முதல் சினிமா நட்சத்திரம் கே.பி.சுந்தராம்பாள். 1951-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் மேல்சபை உறுப்பினரானார்.
* இந்தியாவின் முதல் துணை பிரதமர் வல்லபாய் படேல்.
* நமது தேசிய சின்னத்திலுள்ள 'சத்யமேவ ஜெயதே' என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் உள்ளது.
* 'வந்தே மாதரம்' பாடல் ஆனந்தமடம் என்னும் நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. இதை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டார்ஜி.
* இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இடம் கொல்கத்தா.
* இந்திய திட்ட நேரம் அலகாபாத்தை அடிப்படையாகக் கொண்டது.
* மெஞ்ஞானப் பாடத்தில் முதல் மாணவராக தேர்ச்சி அடைந்து 'சாஸ்திரி' என்ற பட்டத்தை லால்பகதூர் சாஸ்திரி பெற்றோது அவருக்கு வயது 22.
* ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்த ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைன்
* டெல்லியின் பழைய பெயர் ஷாஜகானாபாத்.
* கல்லில் ஓவியம் பதிக்கும் கலைக்குப் பெயர் லித்தோகிராபி.

Tuesday, 16 January 2018

CURRENT AFFAIRS | நடப்பு நிகழ்வுகள்


1) காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
ஜோகன்னஸ்பர்க் நகர் – தென் ஆப்பிரிக்கா (டிசம்பர் 10 முதல் 17 வரை)

2) பிரேம்ஜித் லால் இன்விடேஷல் டென்னிஸ் தொடர் நடைபெற்ற இடம்?
கொல்கத்தா

3) கொல்கத்தாவில் நடைபெற்ற பிரேம்ஜித் லால் இன்விடேஷல் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
ராம்குமார் ராமநாதன் – தமிழக வீரர்

4) கொல்கத்தாவில் நடைபெற்ற பிரேம்ஜித் லால் இன்விடேஷல் டென்னிஸ் தொடரில் இரட்டயர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவரவர்கள்?
ஜீவன் நெடுஞ்செயிழன் – விஜய் சுந்தர்

5) டிசம்பர்-2017ல் டெல்லியில் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் எத்தனையாவது கூட்டம்?
24-வது கூட்டம்

6) 24-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எதற்கு அனுமதி அளித்துள்ளது?
மின்னணு பயண ரசிதுக்கு அனுமதி

7) ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக டிசம்பர்-10 ல் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?
உமா சங்கர் (இவரோடு மொத்தம் 11 நிர்வாக இயக்குநர்கள்)

8) நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கிய திட்டம்?
அடல் புத்தாக்க திட்டம்

9) அடல் புத்தாக்க திட்டத்தின் சார்பில் Atal Tinkerikg Lab"s Community Day கடைபிடிக்கப்பட்ட நாள்?
டிசம்பர் 15 – 2017

10) இந்தியா – மாலத்தீவுகள் இராணுவங்களின் 8-வது கூட்டுப்பயிற்சியின் பெயர்?
EKUVERIN பயிற்சி - 2017

Monday, 15 January 2018

TAMIL G.K IN TAMIL - பொது அறிவு தகவல்கள் | சேர்மன் மா சே துங்கின் மேற்கோள்கள்


1. ஆங்கிலத்தில் 'புக்' என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் பேரரசர் ஆல்ஃபிரெட். அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் அந்த வார்த்தை இடம்பெற்றிருந்தது. கி.பி. 849-899 வரை வாழ்ந்த அவர், தொடக்கக் கல்வியை லத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் வழங்க வலியுறுத்தியவர். 'ஆல்ஃபிரெட் தி கிரேட்' ஆட்சி செய்த பகுதி எது?
2. புத்தகங்களின் தீவிர வாசகர் அல்லது புத்தகங்களைச் சேகரிப்பவர் ஆங்கிலத்தில் bibliophile என்று அழைக்கப்படுகிறார். சாதாரணமாகச் சொல்வதென்றால் புத்தகப்புழு. சரி, பழைய புத்தகங்களின் வாசனையை நுகர்வதை ஒரு பழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு என்ன பெயர்?
3. உலகில் அதிகம் விற்பனையான புத்தகமாக பைபிள் கருதப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் பெரிதாக மதிக்கப்படும், அடிப்படை விதிகளைக் கூறும் புத்தகத்தை பைபிள் என்ற அடைமொழியால் அழைப்பது உண்டு. கின்னஸ் சாதனைப் புத்தகக் கணக்குப்படி 1815 முதல் 1975 வரையிலான 160 ஆண்டுகளில் எத்தனை பைபிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன?
4. உலகில் இதுவரை அதிகம் படிக்கப்பட்ட மூன்று புத்தகங்களில் பைபிளும் ஹாரி பாட்டர் வரிசை நூல்களும் உள்ளன. அச்சு வடிவிலான பைபிள் பல மொழிகளில், பல நூற்றாண்டுகளாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. ஹாரி பாட்டர் நூல் வரிசை கடந்த நூற்றாண்டின் இறுதியில் அதிகம் விற்பனையான புத்தகம். இந்த இரண்டைத் தவிர அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் எது?
5. பிரிட்டனில் உள்ள பிரபலப் பல்கலைக்கழகம் ஒன்றின் பெயரால் அமைந்தது இந்தப் பதிப்பகம். 1534-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பதிப்பகம் 484 ஆண்டுகளைக் கடந்து 500-ம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் பழமையான இந்தப் பதிப்பகத்தின் பெயர் என்ன?
6. புத்தகம் மற்றும் பருவ இதழ்கள் வழங்கும் சட்டம் 1954-ன் படி (Delivery of Books and Periodicals Act, 1954) இந்தியாவில் பதிப்பிக்கப்படும் ஒவ்வொரு புத்தகத்தையும் எந்த ஊரில் அமைந்துள்ள தேசிய நூலகத்துக்கு அனுப்ப வேண்டும்?
7. மத்திய காலத்தில் ஐரோப்பாவில் சங்கிலி நூலகங்கள் இருந்தன. இந்த நூலகங்களில் ஒவ்வொரு புத்தகமும் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும். விருப்பமுள்ளவர்கள் புத்தகத்தை எடுத்துப் படித்துவிட்டு, மீண்டும் அங்கேயே வைத்துவிட்டுச் செல்லவும் அரிய புத்தகங்கள் காணாமல் போவதைத் தடுக்கவும் இந்த ஏற்பாடு. எந்த நூற்றாண்டுவரை இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது?
8. உலகில் அதிகம் விற்பனையான கதை சாராத நூல் பைபிள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகும் படைப்பாக்க நூல் அல்லது நாவல் எது?
9. இங்கிலாந்தில் 1450-ம் ஆண்டிலிருந்து தொடக்கக் கல்விப் புத்தகங்கள், அடிப்படைக் கல்விப் புத்தகங்கள் hornbook என்றழைக்கப்பட்டன. நவீனக் கல்வி சாதனங்கள் வருவதற்கு முன்பு இவையே தொடக்கக் கல்வி கற்றல் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. புத்தகங்கள் என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பாலும் ஓர் இதழ் அல்லது ஒரே பக்கமாக இவை இருந்தன. ஆங்கில அகரவரிசையோ மதம் சார்ந்த கருத்துகளோ எழுதப்பட்டிருந்தன. இவை ஏன் 'ஹார்ன் புக்' எனப்பட்டன?
10. இன்றைக்கு அதிகம் விற்கும் புத்தகங்கள் 'பெஸ்ட் செல்லர்' என்று வர்ணிக்கப்படுவதை அறிந்திருப்போம். முதன்முறையில் அப்படி வர்ணிக்கப்பட்ட புத்தகம் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஆலிஸ் பிரவுன் எழுதிய 'ஃபூல்ஸ் ஆஃப் நேச்சர்' புத்தகமே. இந்தப் புத்தகம் எந்த ஆண்டு இப்படி வர்ணிக்கப்பட்டது?

விடைகள்

1. பிரிட்டன்
2. Bibliosmia
3. 500 கோடி
4. சேர்மன் மா சே துங்கின் மேற்கோள்கள்
5. கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்
6. கொல்கத்தா
7. 18-ம் நூற்றாண்டு
8. ஸ்பானிய மொழியில் மிகேல் டி செர்வான்டிஸ் எழுதிய டான் குயிக்ஸாட், இது முதல் நாவலாகக் கருதப்படுகிறது
9. ஒளி ஊடுருவக்கூடிய விலங்குக் கொம்புகள் அல்லது மைகா இந்தப் புத்தகங்களின் மேல் பொருத்தப்பட்டிருந்தது.
10. 1889


TAMIL G.K IN TAMIL - பொது அறிவு தகவல்கள் | இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1935


1. இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1935
2. ஸ்பினிக்ஸ் எனும் பெண்தலையும், சிங்க உடலும் கொண்ட சிலை உள்ள நாடு - எகிப்து
3. ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது - ரோம்
4. காற்று நகரம் எனப்படுவது - சிகாகோ
5. இந்தியாவில் முதல் பின்கோடு பெற்றுள்ள மாநிலம் - புதுதில்லி
6. இந்தியாவில் நூலகம் (தேசிய) இருக்குமிடம் -  கொல்கத்தா
7. இந்தியாவில் உடன்கட்டை(sati) ஏறும் வழக்கத்தை ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு
8. இந்தியாவின் புரதான சின்னங்களை பாதுகாத்தவர் - கர்சன் பிரபு
9. இந்திய தேசியக் கொடியில் இருக்கும் ஆரங்களின் எண்ணிக்கை - 24
10. ஐ.நா தினம் கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 24
11. அதிக பரப்பளவு கொண்ட நாடு - சீனா
12. ஐ.நா.வின் (UNO) சின்னம் - ஆலிவ் கிளை
13. தாமரை சின்னம் குறிப்பது - கலாச்சாரம், நாகரீகம்
14. பஞ்சாபின் நாட்டிய நாடகம் - பங்காரா
15. ஐ.நா. சபையில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 185
16. நளவெண்பாவின் ஆசிரியரான புகழேந்தி வாழ்ந்தது - சோழர்காலம்
17. சைவசித்தாந்த வேதத்தின் விரிவுரையாளர் - மெய்கண்ட தேவர்
18. ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தும் அரசியல் சட்டம் - 356 ஷரத்து
19. ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள் என்று பிரச்சாரம் செய்தவர் - நாராயணகுமார்
20. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடிகோடிட்டவர் - விக்ரம் சாராபாய்
21. உலகிலேயே ஒரே ஒரு இந்து மத நாடு - நேபாளம்
22. உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கம் - கிம்பர்லி
23. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - அரேபியா
24. சூயஸ் கால்வாய் திட்டத்தை உருவாக்கியவர் - பெர்டினாஸ்ட் லெஸ்ஸப்ஸ்
25. நீண்ட காலமாக மத்திய காபினெட் அமைச்சராக இருந்த பெருமை பெற்றவர் - ஜெகஜீவன்ராம்
26. அமெரிக்க சுதந்திரப் போரின் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்
27. பாகிஸ்தானின் முதல் பிரதமர் - லியாகத் அலிகான்
28. ஆஸ்திரேலியா நாணயத்தின் பெயர் - டாலர்
29. சாந்தி வனம் யாருடைய சமாதி - நேருஜி
30. கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் குளிர்ப்பதனமாக ரியாக்டரில் பயன்படுவது - கனநீர்
31. 1946-ல் ஏற்படுத்திய காபினட் குழு எந்த நிபந்தனையில் ஏற்படுத்தப்பட்டது - டொமினியன் அந்தஸ்து தர
32. பலவகை இரத்த பிரிவுகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி - கார்லஸ் லான்ட்ஸ்டின்
33. மிகக் கனமான மூளை உள்ள மிருகம் - பன்றி
34. தென்மேற்கு ஆப்பிரிக்காவின் புதிய பெயர் - நமீபியா
35. ரொடிசியா நாட்டின் பிதிய பெயர் - ஜிம்பாவே
36. ஜமின்தார் முறையை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ் பிரபு
இந்திய பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது - இரு முறை
37. மாக் நம்பர் (Mach Number) எதனுடன் தொடர்புடையது - விமானங்கள்
38. டென்மார்க்கில் பேசப்படும் மொழி - டேனிஷ்
39. ஆரோவில்லுள்ள இடம் - புதுச்சேரி
40. உத்தர பிரதேசத்தின் அணுசக்திநிலையம் உள்ள இடம் - நரோரா
41. சுயஸ் கால்வாய் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது - 10.1/2 ஆண்டுகள்
42. ஹைதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது - மூசி நதிக்கரையில்
43. பழங்குடி மக்களாகிய தோடர்கள் வசிக்கும் இடம் - நீலகிரி
44. இந்தியாவின் இரண்டாவது விண்வெளிக்கோள் - பாஸ்கரா
45. "வைக்கம் வீரர்" எனப் போற்றப்படுபவர் - ஈ.வே.ராமசாமி
46. நெப்போலியனோடு தொடர்புடைய இடம் - கார்சிகா
47. கொரியப்போர் எந்த ஆண்டு மூண்டது - 1951
48. மோனிகா செலஸ் தொடர்புடைய விளையாட்டு - சென்னிஸ்
49. கயாவுடன் தொடர்புடையவர் - புத்தர்
50. டயரின் வியாபாரப் பெயர் - டன்லப்

Thursday, 11 January 2018

இன்று ஜனவரி 12

உலக வரலாற்றில் இன்றைய தேதியில் (ஜனவரி 12) நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை அறிவோம்...

* ஸ்வீடனின் தேசியத் தந்தை என போற்றப்படும் முதலாம் கஸ்டவ் மன்னன் 1528-ம் ஆண்டு இதே நாளில்தான் முடிசூடிக் கொண்டார். அவர் 37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தார்.

* 1554-ல் பர்மாவின் அரசராக பாயின்னாங் முடிசூடினாார். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தேசமாக தனது எல்லைப் பகுதிகளை விரித்து அரசாட்சி செய்தவர் இவர்.

* 1872-ல் எத்தியோபியாவின் சர்வாதிகார மன்னராக நான்காம் யோகான்னி முடிசூடினார்.

* 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தனது கடைசி உண்ணாவிரதப் போராட்டத்தை கடைப்பிடித்தார்.

* 1970-ம் ஆண்டு நைஜீரிய உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. பியாபிரா மாகாண கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தார்கள்.

* 2010-ம் ஆண்டு ஹைதி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரம் சின்னாபின்னமானதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் மரணம் அடைந்தார்கள்.

* உலகின் புகழ்பெற்ற டி.வி. காமெடி தொடரான 'ஆல் இன் த பேமிலி' தொடர் அமெரிக்காவின் சி.பி.எஸ். தொலைக்காட்சியில் 1971-ம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கியது.

Wednesday, 10 January 2018

‘இஸ்ரோ’ புதிய தலைவராக கே.சிவன் நியமனம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்

'இஸ்ரோ' புதிய தலைவராக கே.சிவன் நியமனம் தமிழ்நாட்டை சேர்ந்தவர் | இஸ்ரோ புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர். நியமனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ'வின் தலைவராக ஏ.எஸ்.கிரண் குமார் பணியாற்றி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நியமிக்கப்பட்ட இவர், ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, 'இஸ்ரோ' புதிய தலைவராக பிரபல விஞ்ஞானி கே.சிவன் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு நியமனங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு அவர் இப்பொறுப்பை வகிப்பார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. விஞ்ஞானி கே.சிவன், தற்போது, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் விஞ்ஞானி கே.சிவன், தமிழ்நாட்டில் நாகர்கோவில் அருகே உள்ள வல்லங்குமாரவிளையை சேர்ந்தவர். 1980-ம் ஆண்டு, சென்னையில் உள்ள எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கில் பட்டம் பெற்றார். 1982-ம் ஆண்டு, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார். 2006-ம் ஆண்டு, மும்பை ஐ.ஐ.டி.யில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங்கில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். விருதுகள் 1982-ம் ஆண்டு, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி. திட்டத்தில் பணியாற்றினார். பல்வேறு பத்திரிகைகளில் விஞ்ஞான கட்டுரைகள் எழுதி உள்ளார். ஏராளமான விருதுகளும் பெற்றுள்ளார். சென்னையில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விஞ்ஞானி கே.சிவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 1999-ம் ஆண்டுக்கான ஸ்ரீ ஹரிஓம் ஆசிரமம் டாக்டர் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருதும் அவர் பெற்றுள்ளார்.

Monday, 8 January 2018

கொல்கத்தா பற்றிய சில தகவல்கள்...

கொல்கத்தா பற்றிய சில தகவல்கள்...

* தற்போது கொல்கத்தா என்றழைக்கப் படும் இந்த நகரம் முன்பு கல்கத்தா என்று அழைக்கப்பட்டது.

* இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் கொல்கத்தாவில்தான் தொடங்கப்பட்டது. அங்கிருந்து தான் இந்தியாவின் முதல் செய்தித்தாள் வெளியானது.

* கொல்கத்தாவில்தான் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

* ஹூக்ளி நதியின் மீது கவுரா-கொல்கத்தா நகரங்களை இணைக்கப்பட்டுள்ள கவுரா பாலம் மிகப் பழமையானது. 1943-ல் இது திறக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவின் முதல் தபால் நிலைய அலுவலகமும் கொல்கத்தாவில்தான் உள்ளது.

* பிர்லா கோவில், ஜெகநாத் கோவில் ஆகியவை கொல்கத்தாவில் சிறப்பு வாய்ந்த இடங்களாகும்.

* அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கத்தா.

* இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டன் கொல்கத்தாவில் தான் அமைந்துள்ளது.

* பிரபலமான ‘எழுத்தாளர் கட்டிடம்’ அமைந்துள்ளதும் கொல்கத்தாவில்தான். 

TAMIL G.K IN TAMIL - பொது அறிவு தகவல்கள்

TAMIL G.K IN TAMIL - பொது அறிவு தகவல்கள்

1. மக்மகான் எல்லைக் கோடு எந்த இரு நாடுகளை பிரிக் கிறது?
2. உலகிலேயே மிகச்சிறிய நாடு?
3. ஈபிள் டவர் எங்கு உள்ளது?
4. இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இடம் எது?
5. ஒளி சுவாசம் நடைபெறாத இடம்?
6. உலகில் எங்கு அதிகமாக ரப்பர் உற்பத்தி செய்யப்படு கிறது?
7. ஐ.நா. நூலகம் எங்கு உள்ளது?
8. ஐ.நா. சபை முறையாக எப்போது தொடங்கியது?
9. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
10. வைட்டமின்களை கண்டுபிடித்தவர்?
11. தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர்?
12. இங்கிலாந்தின் தேசிய சின்னம் எது?
13. இலங்கை, இந்தியா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்ட் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள சின்ன ஒற்றுமை என்ன?
14. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
15. இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும், நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்?
16. சிங்கத்தை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?
17. பங்களாதேஷின் தேசிய சின்னம் என்ன?
18. கங்காருவை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது?
19. உலகின் மிக பிரபலமான விளையாட்டு?
20. பஞ்சாபில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற நாடு எது?
21. உலகிலேயே மிகப்பெரிய தீவு?
22. கங்கை ஆறு எந்த இடத்தில் சமவெளியை அடைகின்றது?
23. கடல் மட்டத்தில் ஒலியின் வேகம்?
24. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி?
25. வாஸ்குலர் கற்றை கொண்ட பூக்கும் தாவரம்?

விடைகள்:-

1. இந்தியா-சீனா, 2. வாடிகன், 3. பாரீஸ், 4. நாசிக், 5. சைட்டோபிளாசம், 6. மலேசியா, 7. நியூயார்க், 8. 1945 அக்டோபர் 24-ம் நாள், 9. ரோமானியர்கள், 10. கேசிமிர் பங்க், 11. பேர்டு ஜே.எல்., 12. ரோஜா, 13. சிங்கத்தை அடிப்படையாக கொண்ட சின்னம், 14. திருச்சி, 15. ராகேஷ் ஷர்மா, 16. பெல்ஜியம், 17. நீர் அல்லி, 18. ஆஸ்திரேலியா, 19. கால்பந்து, 20. இந்தியா, 21. கிரீன்லாந்து, 22. ஹரித்வார், 23. 340 மீ/வி, 24. பாரமானி, 25. பெனரோகோம் 

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்

CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020).  | CLICK HERE CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY...