டல்ஹௌசி பிரபு

டல்ஹௌசி பிரபு (Lord Dalhousie) - இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1848 முதல் கி.பி. 1855 வரை. முதல் இருப்புப்பாதை (இரயில் தண்டவாளம்) கி.பி. 1853ல் பம்பாய் முதல் தானே வரை போடப்பட்டு, அதில் முதல் இந்திய இரயில் ஓடியது. ஆகவே, டல்ஹௌசி பிரபு "இருப்புப்பாதையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். 1853ல் தபால், தந்தி அனுப்பும் முறையை இந்தியாவில் இவர் தான் அறிமுகம் செய்தார். அரையணா (3 பைசா) அஞ்சல் முறையை இவர் தான் அறிமுகம் செய்தார். இவர் 1856 ல் விதவைகள் மறுமணச் சட்டம் (Widow Remarriage Act) கொண்டுவந்தார். ரூர்கி என்ற இடத்தில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி (Engineering College) ஆரம்பித்தவர் டல்ஹௌசி பிரபு. இதன் காரணமாக, "நவீன இந்தியாவை உருவாக்கியவர்" என்று டல்ஹௌசி பிரபு போற்றப்படுகிறார்.

Comments