பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
"நாலடி,நான்மணி,நால்நாற்பது,ஐந்திணை,முப் பால்,கடுகம்,கோவை,பழமொழி,மாமூலம், இன்னிலைய காஞ்சியோடு,ஏலாதி என்பவே, கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு."
இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

நீதி நூல்கள் 

 1. நாலடியார்
 2. நான்மணிக்கடிகை
 3. இன்னா நாற்பது
 4. இனியவை நாற்பது
 5. திருக்குறள்
 6. திரிகடுகம்
 7. ஏலாதி
 8. பழமொழி நானூறு
 9. ஆசாரக்கோவை
 10. சிறுபஞ்சமூலம்
 11. முதுமொழிக்காஞ்சி

அகத்திணை நூல்கள் 

 1. ஐந்திணை ஐம்பது
 2. திணைமொழி ஐம்பது
 3. ஐந்திணை எழுபது
 4. திணைமாலை நூற்றைம்பது
 5. இன்னிலை
 6. கார் நாற்பது

புறத்திணை நூல் 

 1. களவழி நாற்பது
=============================================================

1. நாலடியார்  - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை  - விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது - கபிலர்
4. இனியவை நாற்பது  - பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் - நல்லாதனார்
6. ஏலாதி - கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி  - கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் - திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
10.பழமொழியின் நானூறு - முன்றுரை அரையனார்
11. சிறுபஞ்சமூலம்  - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
13. ஐந்திணை எழுபது - மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது - கண்ணன்; சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
16. கைந்நிலை - புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது - பொய்கையார்

Comments