பொது அறிவு தகவல்கள்


1. சிவப்பு நிற தேசியச் சின்னம் அச்சிடப்பட்ட எழுதுதாள்களை பயன்படுத்துபவர்கள் யார்?

2. ‘பி கிரேட்’ (Be great) எனத் தொடங்கும் தேசிய கீதம் எந்த நாட்டுடையது?

3. சிதார் இசைக்கருவியை கண்டுபிடித்தவர் யார்?

4. ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் யார் இயற்றியது?

5. சூப்பர் பவல் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

6. வெட்கட்ராமன் ராமகிருஷ்ணன் எது பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றார்?

7. பிஸ்மில்லாகான் எந்த இசைக்கருவியை இசைப்பதில் பிரபலமானவர்?

8. அரசர் ஹூமாயுன், யாரிடம் தோல்விகண்டு நாட்டை இழந்தார்?

9. ஓமியோபதி மருத்துவத்தின் தந்தை யார்?

10. சைவ ஆகமங்களின் எண்ணிக்கை எத்தனை?

11. கணினி சிப் தயாரிப்பில் முதன்மையான நிறுவனம் எது?

12. கிரிக்கெட் மட்டை எவ்வளவு அகலம் இருக்க வேண்டும்?

13. நட்சத்திர மீன் எந்த வகை உயிரினமாகும்?

14. தில்லை நெருப்புக்குழியில் மூழ்கி எழுந்த நாயன்மார் யார்?

15. இண்டிபென்டன்ட் இதழை நடத்தியவர் யார்?

16. ஒரு பெண் சனி, ஞாயிற்றுக்கிழமைகளைச் சேர்க்காமல் தன் வயது 25 என்று கூறுகிறார், அவரது உண்மையான வயது என்னவாக இருக்கும்?

17. இந்திய தேசிய சாம்பியன்ஷிப் ஆக்கி கோப்பை எப்படி அழைக்கப்படுகிறது?

18. கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட இந்து மதப்பிரிவு எப்படி அழைக்கப்படுகிறது?

19. கார் நாற்பது நூலை எழுதியவர் யார்?

20. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தகர்த்த ஆங்கிலேயே தளபதி யார்?

விடைகள்: 

1. மாநிலங்களவை உறுப்பினர், 2. ரஷியா, 3. அமீர் குஸ்ரு, 4. கோமல் சாமிநாதன், 5. பேஸ்பால், 6. ரிபோசோம், 7. ஷெனாய், 8. ஷெர்ஷா, 9. சாமுவேல் ஹானிமன், 10. 28, 11. இன்ட்டெல் 12. 11.4 சென்டிமீட்டர், 13. முட்தோலி, 14. நந்தனார், 15. மோதிலால் நேரு, 16. 35, 17. ரங்கசாமி கோப்பை, 18. காணாபத்யம், 19. கண்ணன் கூத்தனார், 20. பானர்மேன்.

Comments