முதன்முதலில் சைக்கிளில் உலகை சுற்றியவர் யார்?


1) 'ஆயிரம் ஏரிகள் நிறைந்த நாடு' என்று எந்த நாடு அழைக்கப்படுகிறது?

2) பின்லாந்து நாட்டில் உள்ள 'ரோவானீமி' என்ற நகரத்தின் சிறப்பு என்ன?

3) முதன்முதலில் சைக்கிளில் உலகை சுற்றியவர் யார்?

4) இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இசையமைப்பாளர் யார்?

5) இந்திய கிராமங்களில் வசிக்கும் 70 சதவீத மக்களின் முக்கிய தொழில் என்ன?

6) டொனால்டு டிரம்புக்கு முன்பு எத்தனை பேர் அமெரிக்காவில் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர்?

7) தென் துருவத்தில் கண்டங்களுக்கு இடையே நடக்கும் பாய்மரப்படகு போட்டியின் பெயர் என்ன?

8) கோவா மாநிலத்தின் அரசுப்பறவை எது?

9) இந்திய சரணாலயங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு புலிகள் இந்த மாநிலத்தில் வசிக்கின்றன. அந்த மாநிலம் எது?

10) 2026-ம் ஆண்டு கீழ்க்கண்டவற்றில் எந்த நாட்டில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்க உள்ளது?

அ) ரஷ்யா, ஆ) சீனா, இ) இந்தியா, ஈ) ஜப்பான்

விடைகள்:- 1) பின்லாந்து. 2) கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் பிறந்த இடம் 3) சைக்கிளில் உலகை முதன்முதலில் சுற்றிவந்தவர் தாமஸ் ஸ்டீவன்சன். இவர் 1884-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். 1886-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பயணத்தை இவர் நிறைவு செய்தார். இந்த பயணத்தின் போது இவர் வித்தியாசமான சைக்கிள் ஒன்றை பயன்படுத்தினார். அந்தக்காலத்தில் 'பென்னி பார்திங்' என்ற பெயரில் இந்த வகை சைக்கிள்கள் அழைக்கப்பட்டன. இந்த சைக்கிளின் முன் பக்க சக்கரம் பெரியதாக இருக்கும், பின்பக்க சக்கரம் சிறியதாக இருக்கும். 4) பாப் டைலன் 5) விவசாயம் 6) 44 பேர் ஜனாதிபதியாக இருந்துள்ளனர் 7) பந்தயத்தின் பெயர் 'தி கேப் டு ரியோ' என்பதாகும். தெற்கு அண்டலாண்டிக் கடலில் 6500 கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டும். 8) புல்புல் பறவை. 9) உத்தரகாண்ட் 10) ஜப்பான்

Comments