பொது அறிவு தகவல்கள்

1. தேசிய வருமான பங்களிப்பில் சுரங்கங்கள் எந்தப் பிரிவில் இடம் பெறுகிறது?

2. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் தொகை எப்படி அழைக்கப்படுகிறது?

3. இந்தியாவில் பனிப்புயல் அபாயத்தை தடுக்கும் இயற்கை அமைப்பு எது?

4. வர்த்தமான வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?

5. சூரியன் பூமியைப்போல எத்தனை மடங்கு பெரியது?

6. வனக் கழுதை சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

7. டோஹ்ரி என்பது என்ன?

8. ஒளி எந்த படிகத்தின் வழியே செல்லும்போது இரட்டை விலகல் அடைகிறது?

9. இந்திய பிரதமர்களில் ஓவியம் வரையும் திறன் பெற்றவர் யார்?

10. சிந்து சமவெளி மக்களின் தெய்வம்?

11. உலக வர்த்தக சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

12. இந்தியாவின் ஆபரணம் எனப்படும் நகரம் எது?

13. இடி மின்னல்களின் நாடு எனப்படுவது எது?

14. பஞ்சாபில் கம்பளித் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதி எது?

15. ஊட்டச்சத்துகள் உடைந்து ஆற்றல் கிடைக்கும் நிகழ்வு எப்படி அழைக்கப்படுகிறது.?

16. காந்த மின்புலங்களால் விலக்கம் அடையாத கதிர் எது?

17. குப்தர்களின் வெள்ளி நாணயம் எப்படி அழைக்கப்பட்டது?

18. பேட்டரிகளில் பயன்படும் உலோகம் எது?

19. வேகம் என்பது எந்த அளவுடன் தொடர்புடையது?

20. பாபருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?

விடைகள்:

1. முதன்மைப் பிரிவு, 2. சி.ஆர்.ஆர்., 3. இமயமலை, 4. பிரபாக வர்த்தனர், 5. 109 மடங்கு, 6. ரான் ஆப் கட்ச், 7. ஜம்மு காஷ்மீரில் பேசப்படும் மொழி, 8. கால்சைட், 9. வி.பி.சிங், 10. பசுபதி, 11. 1995, 12. மணிப்பூர், 13. பூடான், 14. தாரிவால், 15. சிதை மாற்றம் 16. காமா கதிர், 17. ரூபிகா, 18. காரீயம், 19. ஸ்கேலர் அளவு, 20. ஹூமாயூன்.

Comments