உலகின் தெற்கு மூலையில் அமைந்துள்ள நகரம் எது?


1) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரான அவர் 22.11.2016 அன்று மரணம் அடைந்தார். அவர் யார்?

2) 22.11.2016 அன்று இந்த நாட்டில் 6.9 ரிக்டர் அளவுப்படி பூகம்பம் ஏற்பட்டது. இதையொட்டி சுனாமி ஆபத்தும் உருவானது. அந்த நாடு எது?

3) இந்திய சரக்கு கப்பல் அமைப்பில் முதலாவதாக கேப்டனாக பணியாற்றிய இந்தியப்பெண் யார்?

4) கர்நாட இசைக்கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பிறந்த இடம் எது?

5) இந்தியாவில் உள்ள சில்லரை விற்பனைக்கடைகள் உள்ள பகுதியில் அதிக விலைவாசி உள்ள கடைகள் எங்கு அமைந்துள்ளன?

6) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட தரவரிசைப்பட்டியல்படி அதிக புள்ளிகள் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

7) இந்தியாவின் மிகப்பெரிய வாகனப்பாதை எது?

8) உலகின் உள்ள நகரங்களில் 'பட்டங்களின் நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது?

9) 'டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் நேஷனல் சென்டர் பார் பயலாஜிக்கல சயின்சஸ்' என்ற ஆய்வு அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக இருக்கிறார் உபைது சித்திக். இது சரியா, தவறா?

10) உலகின் தெற்கு மூலையில் அமைந்துள்ள நகரம் எது?

விடைகள்:-

1) பேராசிரியர் எம்.ஜி.கே.மேனன்

2)வடகிழக்கு ஜப்பான்

3) கேப்டன் ராதிகா மேனன்

4) ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார்.

5) புதுடெல்லியில் அமைந்துள்ள கரண் மார்க்கெட்

6) விராட்கோலி

7) லக்னோ-ஆக்ரா இடையே அமைந்துள்ள 6 வழி வாகன சாலைப்பாதை.

8) சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வெய்பிங் என்ற இடம் தான் 'பட்டங்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

9) உண்மை

10) அர்ஜன்டினாவில் உள்ள உசூயா என்ற நகரம்.

Comments