பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 6

 1. திறவுகோல் - சாவி
 2. திறனல்ல - செய்யத்தகாத
 3. தீதினறி- தீங்கின்றி
 4. தீயின்வாய் - நெருப்பில்
 5. தீராமை - நீங்காமை
 6. தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
 7. துகிர் - பவளம்
 8. துஞ்சான் - துயிலான்
 9. துஞ்சினவர் - உறங்கியவர்
 10. துடி - பறை
 11. துப்பட்டி - போர்வை
 12. துய்ப்பேம் - நுகர்வோம்
 13. துலங்குதல் -விளங்குதல்
 14. துலை - துலாக்கோல்
 15. துலையல்லார் - ஆற்றலில்
 16. துவ்வா - நுகராத
 17. துவ்வாமை - வறுமை
 18. துளக்கம் - விளக்கம்
 19. துறந்தார் - பற்றினை விட்டவர்
 20. துறை - தோணித்துறை
 21. துறை - படிக்கட்டு
 22. துன்பு - துன்பம்
 23. துன்புறூஉம் - துன்பம் தரும்
 24. துன்னலர் - பகைவர்
 25. தூஉயம் - தூய்மை உடையோர்
 26. தூங்கிய - தொங்கிய
 27. தூமம் - அகிற்புகை
 28. தூய்மை - தூய தன்மை
 29. தூர்கட்டி - பயிர் அடி பருத்து வளர்தல்
 30. தூவி - சிறகு
 31. தூறு - புதர்
 32. தெங்கம்பலம் - முந்திய தேங்காய்
 33. தெண்டனிட்டது - வணங்கியது
 34. தெண்டிரை - தெளித்த அலைகள்
 35. தெரிசனம் - காட்சி
 36. தெருளும் - தெளிவில்லாத
 37. தெளிந்தார் - தெளிவு பெற்றார்
 38. தெளிவீரே – தெளியுங்கள்
 39. தெளிவுறுத்தும் - விளக்கமாகக் காட்டும்
 40. தெறு - பகை
 41. தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
 42. தென்புலம் - தென்னாடு
 43. தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன்
 44. தேசம் - நாடு
 45. தேட்டையிட - செல்வம் திரட்ட
 46. தேணு - பசு
 47. தேரா - ஆராயாத
 48. தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும்
 49. தேர்ந்து - ஆராய்ந்து
 50. தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்
 51. தைவந்து - தொட்டுத்தடவி
 52. தொகுப்பு - உறவு
 53. தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி
 54. தொடை - மாலை
 55. தொட்டனைத்து - தோண்டும் அளவு
 56. தொழுது - வணங்கி
 57. தொழும்பர் - அடியார்
 58. தொனி - ஓசை
 59. தொன்மை - தொன்றுத்தொட்டு
 60. தோட்கப்படாத - துளைக்கப்படாத
 61. தோல்வற்றி - தோல்சுருங்கி
 62. தோற்றம் - பிறப்பு
 63. தோன்றி - இரத்தம்
 64. நகல்வல்லர் - சிரித்து மகிடிநபவர்
 65. நகுதல் - சிரித்தல்
 66. நகை - புன்னகை
 67. நகையுள்ளும் - விளையாட்டாகவும்
 68. நடலை - துன்பம்
 69. நடுநாள் யாமம் - நள்ளிரவு
 70. நடுவன் - எமன்
 71. நடை - சாலையில் செல்லும் வண்டிகள்
 72. நட்டல் - நட்புக்கொள்ளுதல்
 73. நண்பு - நட்பு
 74. நமன் - எமன்
 75. நம்பி - தருமி
 76. நயம் - இன்பம்
 77. நயம்இல - இனிமையற்ற
 78. நயனம் - கண்கள்
 79. நயன் - நேர்மை
 80. நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து
 81. நல்கினார் - அளித்தார்
 82. நல்லை - நல்லதாக இருக்கிறாய்
 83. நவில்தொறும் - கற்கக்கற்க
 84. நவ்வி - மான்
 85. நறவம் - தேன்
 86. நற்றிறம் - அறநெறி
 87. நனி - மிகுதி
 88. நன்றி - உதவி. நன்மை
 89. நன்னுதல் - அழகிய நெற்றி
 90. நாடி - விரும்பி
 91. நாணிடவும் - வெட்கப்படவும்
 92. நாண் - நாணம்
 93. நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
 94. நாமம் - பெயர்
 95. நாயகன் - தலைவன்
 96. நாவலன் - புலவர்
 97. நாவாய் - படகு
 98. நாழி - அளவுப்பெயர்
 99. நாளிகேரம் -தென்னை
 100. நாற்றம் - நறுமணம்
 101. நிணம் - கொழுப்பு(இறைச்சி)
 102. நிதி - செல்வம்
 103. நித்தம் - நாள்தோறும்
 104. நிலைபெறுத்தல் - காத்தல்
 105. நில்லாமை - நிலையாமை
 106. நிவேதனம் - படையலமுது
 107. நிழற்றிய - நிழல் செய்த
 108. நிறை - எடை
 109. நிறை - ஒழுக்கம்
 110. நிறை - சால்பு
 111. நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்
 112. நிறைகோல் - துலாக்கோல்
 113. நிற்க - கற்றவாறு நடக்க
 114. நீக்கல் - அழித்தல்

Comments