Sunday, 24 December 2017

டிசம்பர் 6-15 காலங்களில் நடந்த நடப்பு நிகழ்வுகள்.

“மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 9710 கோடி டாலர் நாட்டின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி, 2016- 2017 நிதியாண்டில் 9710 கோடி டாலராக உயர்ந்துள்ளது என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்தது. (டிசம்பர் 9) குஜராத் முதல்கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குப் பதிவு குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளுக்கு நடந்த முதல்கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். (டிசம்பர் 9) இஸ்ரேல் வான் தாக்குதலில் 2 பாலஸ்தீனர்கள் பலி காஸா நகரில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 2 பாலஸ்தீனர்கள் பலியானார்கள். (டிசம்பர் 9) கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம் புயலில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கருப்புக் கொடியுடன் கடலுக்குள் இறங்கிப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. (டிசம்பர் 10) ‘பாரதியாரின் பாடல்களை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ சென்னையில் நடைபெற்ற பாரதி விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ‘பாரதியாரின் பாடல்களை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். (டிசம்பர் 10) முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படுதோல்வி தர்மசாலாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதனால் ‘நம்பர் 1’ வாய்ப்பும் பறிபோனது. (டிசம்பர் 10) உலக ஆக்கி லீக்கில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற உலக ஆக்கி லீக் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. (டிசம்பர் 10) அணு ஆயுதங்களுக்கு எதிரான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற விழாவில், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ‘அணு ஆயுதங்களை அகற்றுவதற்கான சர்வதேச பிரசாரம்’ என்ற அரசு சாரா அமைப்பின் செயல் இயக்குனர் பியாட்ரிஸ் பின்னிடம் வழங்கப்பட்டது. (டிசம்பர் 10) டிரம்ப் முடிவை எதிர்த்து அரபு நாடுகள் கண்டனத் தீர்மானம் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு குறித்து, ‘சர்வதேச சட்டத்தை மீறிய செயல், இது செல்லாது’ என்று அரபு நாடுகள் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றின. (டிசம்பர் 10) நவோதயா பள்ளிகள்: ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது. (டிசம்பர் 11) காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றித் தேர்வு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. (டிசம்பர் 11) கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். (டிசம்பர் 11) கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு மூலம் ரூ. 4.20 லட்சம் கோடி திரட்டல் இந்திய நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் (ஏப்ரல்- நவம்பர்) தனிப்பட்ட முறையில் கடன் பத்திரங்கள் ஒதுக்கி ரூ. 4.20 லட்சம் கோடி நிதி திரட்டி இருக்கின்றன. (டிசம்பர் 11) இந்தியாவில் 81 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 2019 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 81 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. (டிசம்பர் 11) வங்கிகளில் பொதுமக்களின் பணத்துக்கு முழுமையான பாதுகாப்பு வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொதுமக்களின் பணத்தை முழுமையாகப் பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியது. (டிசம்பர் 11) ‘பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்’ பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் நடந்த ரஷியா-இந்தியா-சீனா (ரிக்) ஆகிய 3 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. (டிசம்பர் 11) அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போர் ஒத்திகை வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் கூட்டாக போர் ஒத்திகையில் ஈடுபட்டன. (டிசம்பர் 11) ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறும். (டிசம்பர் 12) உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு உடுமலையில் இளைஞர் சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு திருப்பூர் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. (டிசம்பர் 12) தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். (டிசம்பர் 12) ராஜஸ்தானில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். தனிப்படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் முனிசேகரும் மேலும் சில போலீசாரும் படுகாயம் அடைந்தனர். (டிசம்பர் 13) இ-விசா வசதியின் கீழ் வந்த பயணிகள் எண்ணிக்கை உயர்வு இந்தியாவுக்கு இ-விசா வசதியின் கீழ் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 56 சதவீதம் உயர்ந்தது. (டிசம்பர் 13) 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி மொகாலியில் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் ரோகித் சர்மா 3-வது முறையாக இரட்டைச் சதம் விளாசி உலக சாதனை படைத்தார். (டிசம்பர் 13) எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு கோர்ட்டுகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம், கர்நாடகம் உள்பட 10 மாநிலங்களில் சிறப்பு கோர்ட்டுகளை அமைத்து மார்ச் 1-ம் தேதி முதல் செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (டிசம்பர் 14) குஜராத் தேர்தலில் பிரதமர் மோடி வாக்களித்தார் குஜராத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலில் 68.70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி வரிசையில் நின்று வாக்களித்தார். (டிசம்பர் 14) ‘ஒகி’ புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேர் மாயம் ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்கள் 433 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். (டிசம்பர் 14) பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. (டிசம்பர் 15) ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு அரசின் திட்டங்கள், வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருகிற மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (டிசம்பர் 15) நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி 31 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி, நவம்பர் மாதத்தில் 31 சதவீதம் அதிகரித்து 2619 கோடி டாலராக உயர்ந்தது. (டிசம்பர் 15)

No comments:

Post a comment

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்

CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020).  | CLICK HERE CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY...