பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 4

 1. கழறும் - பேசும்
 2. கழி - உப்பங்கழி
 3. கழுவு துகளர் - குற்றமற்றவர்
 4. களபம் - சந்தனம்
 5. களவு - திருட்டு
 6. களிகூர - மகிழ்ச்சி பொங்க
 7. களிக்க - மகிழ
 8. களிறு - ஆண் யானை
 9. களைந்தோம் - நீக்கினோம்
 10. களையும – நீக்கும் 
 11. கள் - தேன்
 12. கற்றைவார் சடையான் - சிவபெருமான்
 13. கனகம் - பொன்
 14. கனல் - நெருப்பு
 15. கனல் - நெருப்பு
 16. கா - காடு
 17. காசினி - நிலம்
 18. காண்டகு - காணத்தக்க
 19. காதல் - அன்பு
 20. காதல் புதல்வர் - அன்பு மக்கள்
 21. காது - கொல்லுதல்
 22. காப்பு - காவல்
 23. காமத்தீ - காமமெனும் கொடிய விருப்பம்
 24. காமுறுவர் - விரும்புவர்
 25. காய்ந்தார்  - நீக்கினார்
 26. காராளர் - மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
 27. கார்குலாம் - மேகக்கூட்டம்
 28. கான் - காடு
 29. கிரி - மலை
 30. கிழக்காந்தலை - தலைகீழ் (மாற்றம்)
 31. கிழமை - உரிமை
 32. கிளத்தினேன் - சொன்னேன்
 33. கிளர்வேந்தன் - புகழுக்கு உரிய அரசன்
 34. கிளை - சுற்றம்
 35. கீண்டு - தோண்டி
 36. கீண்டு -பிளந்து
 37. கீழவர் - கீழோர்
 38. குசலங்கள் பேசி - நலன் கேட்டு
 39. குஞ்சி - தலைமுடி
 40. குடிமை - உயர்குடி
 41. குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்புநோய்
 42. குரிசில் - தலைவன்
 43. குருசு - சிலுவை
 44. குருசு - சிலுவை
 45. குரைகடல் - ஒலிக்கும் கடல்
 46. குலவு - விளங்கும்
 47. குவை - குவியல்
 48. குழல் - கூந்தல்
 49. குழவி - குழந்தை
 50. குறளை - புறம்பேசுதல்
 51. குறுகி - நெருங்கி
 52. குறுகினன் - வந்துள்ளான்
 53. குறைந்தவர்
 54. குன்றாமை - குறையாது இருத்தல்
 55. குன்று - மலை
 56. கூகை - கோட்டான்
 57. கூண்ட - சேர்ந்த
 58. கூம்பும் - வாய்ப்பற்ற
 59. கூர - மிக
 60. கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்
 61. கூற்று - எமன்
 62. கூனல் - வளைந்த
 63. கேசரி - சிங்கம்
 64. கேண்மின் - கேளுங்கள்
 65. கேண்மை - நட்பு
 66. கேண்மை - நட்பு
 67. கேவிட - வருந்திட
 68. கேழல் - பன்றி
 69. கைத்தொன்று - கைப்பொருள்
 70. கைம்மண்ணளவு - ஒரு சாண்
 71. கைம்மாறு - பயன்
 72. கொடி - பவளக்கொடி
 73. கொற்றம் - அரச நீதி
 74. கொற்றவி - அரசி
 75. கோ - அரசன்
 76. கோடு - கொம்பு. தந்தம். மலையுச்சி
 77. கோட்டம் - கோயில்
 78. கோட்டிகொளும் - கூட்டமாகக் கூடும்
 79. கோட்டு மரம் - கிளைகளைஉடைய மரம்
 80. கோதகம் - அரும்பு
 81. கோமான் - அரசன்
 82. கோலமுறு - அழகுமிக்க
 83. கோறல் - கொல்லுதல்
 84. கோன்மை - அரசாட்சி
 85. சகிப்புத்தன்மை -பொறுத்துக்கொள்ளுதல்
 86. சங்கின் பிள்ளை - சங்குக்குஞ்சுகள்
 87. சதுபர் - அறிவு
 88. சதுரங்கச்சேனை - நால்வகைப் படை
 89. சதைப்புண்டு - சிதைக்கப்பட்டு
 90. சந்தம் - அழகிய
 91. சந்தம் - அழகு
 92. சமர் - போர்
 93. சம்பு - நாவல்
 94. சயசய - வெல்க வெல்க
 95. சரண் - அடைக்கலம்
 96. சலதி - கடல்
 97. சலம் - மன உறுதி
 98. சலவர் - வஞ்சகர்
 99. சலாம் - வணக்கம்
 100. சவம் - பிணம்
 101. சாடும் - தாக்கும்
 102. சாந்துணையும் - சாகும்வரையிலும்
 103. சாயினும் - அழியினும்
 104. சாய்க்காமை - அழிக்காமை
 105. சால்பு - சான்றாண்மை
 106. சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
 107. சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்
 108. சிகரி - மலை
 109. சித்ரம் - சிறப்பான காட்சிகள்
 110. சிந்தை - எண்ணம்
 111. சிரம் - தலை
 112. சிரம் - தலை
 113. சிரம் துளக்கி - தலையசைத்து
 114. சிவிக்கை - பல்லாக்கு


Comments