நடப்பு நிகழ்வுகள் - வினாக்கள் & விடைகள் - 2

26) மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார் ?
விடை –  PRAVIND KUMAR  JUGNATH 
27) உணவு விநியோக துறையில் கால்பதித்துள்ள உபெர் [Uber] நிறுவனம் வெளியிட்டுள்ள செயலி எது ?
விடை –  UberEATS
28) நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003 ஐ { FISCAL RESPONSIBILITY AND BUDGET MANANGEMENT [ FRBM] ACT } மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட N.K. சிங் கமிட்டி வழங்கிய பரிந்துரை என்ன ?
விடை –  நிதி பற்றாக்குறை 3% க்குள் இருக்க வேண்டும் என்பதை 3 முதல் 3.5% வரை இருக்கலாம் என பரிந்துரை வழங்கியுள்ளது.
29) சமுதாய வானொலிகளில் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு நிமிடங்கள் வர்த்தக விளம்பரங்கள் ஒளிபரப்பி கொள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது?
விடை –  7 நிமிடங்கள்
30) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கொல்கத்தாவில் இருந்து தப்பிச்சென்ற நிகழ்வின் 76வது ஆண்டை முன்னிட்டு, அவர் தப்பி செல்ல பயன்படுத்திய கார் மறு சீரமைப்பு செய்து ஜனாதிபதி முன்னிலையில்
வெளிவிடப்பட்டது. அந்த காரின் பெயர் என்ன ?
விடை –  Audi  Wanderer W24 [ ஜெர்மனி தயாரிப்பு ]
31) TROPHICAL PARASITOLOGY CONFERENCE எங்கு நடைபெற்றது?
விடை –  இந்திய வெப்பமண்டல ஒட்டுண்ணியியல் கழகத்தின் 10வது தேசிய மாநாடு நடைபெற்ற இடம் – புதுச்சேரி
32) இந்தியாவின் முதல் ஊரக ஸ்கேட்டிங் பூங்கா எங்கு துவங்கப்பட்டுள்ளது?
விடை –  JANWAAR ( BUNDELKHAND ) மத்திய பிரதேசம்
33) இந்தியாவின் முதல் ரொக்க பரிவர்தனை இல்லாத கிராமமான அகோதராவை தத்து எடுத்த வங்கி எது ?
விடை – ICICI வங்கி
34) தீவிரவாதி பர்ஹான் வாணி சுட்டு கொல்லப்பட்ட பின், காஷ்மீர் சிறுவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் கூடுதல் கல்வி சார்ந்த பயிற்சிகள் வழங்க, ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன ?
விடை –  OPERATION SCHOOL CHALO ( இது தொடர்பாக ராணுவத்தினர் பயன்படுத்திய முழக்கம் -  I don’t need money and fame, I need books and school )
35) STATE OF THE STATE CONCLAVE 2016 எங்கு நடைபெற்றது ?
விடை –  புதுடெல்லி
36) 5வது சர்வதேச சுற்றுலா அங்காடி எங்கு நடைபெற்றது ?
விடை –  இம்பால் ( மணிப்பூர்) [5TH INTERNATIONAL TOURISM MART]
37)மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன ?
விடை –  SABUJSATHI
38) குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள செயலி [ APP ] என்ன ?
விடை –  CHIRAG  App [ CHILD HELPLINE FOR INFORMATION ON THEIR RIGHTS AND TO ADDRESS THEIR GRIEVANCES ]
39) சில்லறை நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது ஆதாருடன் இணைந்த கூப்பன்களை வெளியிட்ட மாநில அரசு எது ?
விடை –  தெலுங்கானா [ IDFC வங்கியுடன் இணைந்து ]
40) தெலுங்கானா மாநில கைத்தறி துணிகள் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார் ?
விடை –  நடிகை சமந்தா
41) சமீபத்தில் NASA அனுப்பிய , அடுத்த தலைமுறை வானிலை செயற்கைக்கோள் எது ?
விடை –  GOES – R
42) சமீபத்தில் ஜப்பான் அனுப்பிய, இணை வட்டப்பாதையில் சுற்றக்கூடிய, அடுத்த தலைமுறை வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோள்  [NEXT GENERATION GEOSTATIONARY METEOROLOGICAL SATELITE] எது ?
விடை –  HIMAWARI – 9 ( HIMAWARI MEANS SUNFLOWER )
43) Hubble தொலைநோக்கிக்கு மாற்றாக , அதனைவிட 100 மடங்கு செயல் திறன் மிக்க தொலைநோக்கியை NASA உருவாக்கியுள்ளது . அதன் பெயர் என்ன ?
விடை –  JAMES WEBB TELESCOPE
44) மலேசியா அரசின் டத்தோ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர் யார் ?
விடை –  ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட முகம்மது யூசுப்.
இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் மலேசிய அரசின் உயரிய டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
45 ) தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
விடை –  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி M.L.A.
46) அவசர ஊர்தி படகு சேவை எங்கு துவங்கப்பட்டுள்ளது?
விடை –  AMBULANCE BOAT SERVICE மும்பை
47) இந்தியா - சீனா எல்லையான டெம்சோக் செக்டார் பகுதியில், எந்த திட்டத்தின்கீழ் கிராமங்களில் பாசன கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன ?
விடை –  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
48) லோசர் திருவிழா தொடர்பான மாநிலம் எது?
விடை –  ஜம்மு & காஷ்மீர்
49) 2017ல் நடைபெறுகின்ற ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்த தேர்தல் ஆணையம், எந்த சமூக வலைத்தளத்துடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டது ?
விடை –  முகநூல் ( FACEBOOK )
50) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விமான நிலையம் [ECO FRIEND AIRPORT ] என்ற சிறப்பை பெற்றுள்ள விமான நிலையங்கள் எது ?
விடை –  சண்டிகர் & வதோரா

Comments