பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 2

 1. இடர் – இன்னல், துன்பம
 2. இடிக்கும் - கடிந்துரைக்கும்
 3. இடித்தல் - கடிந்துரைத்தல்
 4. இடிப்பார் - கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
 5. இடுக்கண் - துன்பம்
 6. இடும்பை - துன்பம்
 7. இடையல் - துகில்
 8. இட்டீடு - விவாதம்
 9. இணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும்படி
 10. இதனி - வெற்றிலை
 11. இந்தனம் - விறகு
 12. இந்து - சந்திரன்இ நிலவு
 13. இமயன் - கூற்றுவன்
 14. இமையவர் - தேவர்
 15. இம்மை – இப்பிறவி 
 16. இயைந்தக்கால் - கிடைத்தபொழுது
 17. இரட்சகர் - காப்பவர்
 18. இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
 19. இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
 20. இரவி - சூரியன்
 21. இருத்தி – இருப்பாயாக
 22. இருநிலம் - பெரிய உலகம்இ பெரிய நிலம்இ பெரியழகு
 23. இருநிறம் - அகன்ற நெஞ்சு
 24. இருப்பாணி - இரும்பு ஆணி
 25. இருப்புமுளை - ஆணியின் நுனி
 26. இரும்பனை - பெரிய பனை
 27. இரும்பொறை - பெரும்பொறுமை
 28. இருள் - பகை
 29. இல் - இல்லை
 30. இல்லார் - ஏழை
 31. இவண்நெறியில் - இவ்வழியில்
 32. இவுளி - குதிரை
 33. இழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்
 34. இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
 35. இளவல் - தம்பி
 36. இளிவன்று - இழிவானதன்று
 37. இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்
 38. இறந்தார் - வரம்பு கடந்தவர்
 39. இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை
 40. இறுவரை - முடிவுக்காலம்
 41. இறை - தலைவன்
 42. இறைச்சி - வணங்கி
 43. இறைஞ்சி - பணிந்து. வணங்கி
 44. இனிதின் - இனிமையானது
 45. இனிய - நன்மை
 46. இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்
 47. இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே
 48. இன்சொல் - இனியசொல்
 49. இன்புறூஉம் - இன்பம் தரும்
 50. இன்மை - வறுமை
 51. இன்னல் - துன்பம்
 52. இன்னா - தீங்கு
 53. இன்னா - தீய
 54. இன்னாச்சொல் - தீய சொல்
 55. ஈகம் - சந்தனமரம்
 56. ஈங்கதிர் - சந்திரன்
 57. ஈஞ்சு - ஈச்சமரம்
 58. ஈட்டம் - கூட்டம்
 59. ஈட்டம் - தொகுதி
 60. ஈண்டிய - ஆய்ந்தறிந்த
 61. ஈண்டு - இவ்விடம்
 62. ஈதல் - கொடுத்தல்
 63. ஈம் - தண்ணீர்
 64. ஈயப்படும் - அளிக்கப்படும்
 65. ஈயும் - அளிக்கும்
 66. ஈரிருவர் - நால்வர்
 67. ஈர்கிலா - எடுக்க இயலாத
 68. ஈர்த்து - அறுத்து
 69. ஈறிலி - கடவுள்
 70. ஈறு - அழிவுஇ எல்லை
 71. ஈனல் - கதிர்
 72. ஈனும் - தரும்
 73. ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
 74. உகந்த - விரும்பிய
 75. உகு - சொரிந்த
 76. உசா - ஆராய்தல்
 77. உடற்சி - கோபம்
 78. உடையார் - செல்வர்
 79. உணர்வு - அறிவியல் சிந்தனை
 80. உணர்வு - நல்லெண்ணம்
 81. உணா - உணவு
 82. உண்டனெம் – உண்டோம் என்பதற்குச் சமமானது
 83. உண்பொழுது - உண்ணும்பொழுது
 84. உதயம் - கதிரவன்
 85. உதிரம் - குருதி
 86. உபகாரத்தான் - பயன்கருதாதுஉதவுபவன்
 87. உபாயம் - வழிவகை
 88. உம்பரார் பதி -தேவர்தலைவன்
 89. உயர்ந்தன்று - உயர்ந்தது
 90. உய்த்து - செலுத்தி
 91. உய்ம்மின் -பிழைத்துக்கொள்ளுங்கள்
 92. உய்ய - பிழைக்க
 93. உரவோர் - மனவலிமையுடையோர்
 94. உரன் - திண்ணிய அறிவு
 95. உரு - வடிவம்
 96. உருகுவார் – வருந்துவார்
 97. உரும் - இடி
 98. உலகம் - உயர்ந்தோர்
 99. உலையா உடம்பு - தளராத உடல்
 100. உல்குபொருள் - வரியாகு வரும் பொருள்
 101. உவணி - வாள்
 102. உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
 103. உவப்ப - மகிழ
 104. உழுபடை - வேளாண்மை செய்யப் பயன்படும்;
 105. உழுவை - புலி (ஆண்புலி)
 106. உழை - ஒருவகை மான்இ மீன்
 107. உளவாக்கல் - உண்டாக்குதல்
 108. உள்ளி - வெங்காயம்
 109. உறுதி - உளஉறுதி
 110. உறுபொருள் - அரசு உரிமையால் வரும்பொருள்
 111. உறைதல் - தங்குதல்
 112. உற்றுழி - தேவையான பொழுது
 113. உன்னி - நினைத்து
 114. உன்னேல் - நினைக்காதே

Comments