தமிழ்நாடு நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் - 1

1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது? சென்னை
2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 130058 சதுரகிலோமீட்டர்
3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (2011கணக்கெடுப்பின் படி) எவ்வளவு? 72147030 பேர்
4 தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பின் படி) ஆண்கள் எத்தனை பேர்? 36137975 பேர்
5 தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (2011 கணக்கெடுப்பின்படி) பெண்கள் எத்தனை பேர்? 36009055 பேர்
6 தமிழ்நாட்டில் மக்கள் நெருக்கம் எவ்வளவு? ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 555பேர்
7 தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் (2011) எத்தனை சதவீதம்? 80.1 சதவீதம்
8 தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் (2011) ஆண்கள் எத்தனை சதவீதம்? 86.8 சதவீதம்
9 தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்களில் (2011) பெண்கள் எத்தனை சதவீதம் பேர்? 73.4 சதவீதம்
10 தமிழ்நாட்டில் ஆண்-பெண் பாலின விகிதம் எவ்வளவு? 1000 ஆண்களுக்கு 996 பெண்கள்
11 தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் எந்த மாநிலம் உள்ளது? ஆந்திரமாநிலம்
12 தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையில் எந்த மாநிலம் உள்ளது? கர்நாடக மாநிலம்
13 தமிழ்நாட்டின் தெற்கு எல்லையில் எந்த கடல் உள்ளது? இந்து மகா சமுத்திரம்
14 தமிழ்நாட்டின் கிழக்கு எல்லையில் எந்த கடல் உள்ளது? வங்காள விரிகுடா
15 தமிழ்நாட்டின் மேற்கு எல்லையில் எந்த மாநிலம் உள்ளது? கேரள மாநிலம்
16 தமிழகத்தின் வடக்கு எல்லை எது? பழவேற்காடு ஏரி
17 தமிழகத்தின் தெற்கு எல்லை எது? கன்னியாக்குமரி
18 தமிழகத்தின் கிழக்கு எல்லை எது? கோடியக்கரை
19 தமிழகத்தின் மேற்கு எல்லை எது? ஆனைமலைக்குன்றுகள்
20 தமிழ்நாட்டின் புவியியலமைவு என்ன? 8°5′-13°35′ வட அட்ச ரேகை;    76°15′-80°20′ கிழக்கு தீர்க்க ரேகை
21 தமிழ்நாட்டின் மக்கள் தொகை 2001ல் எவ்வளவு? 62405679  (ஆண்கள் 31400909; பெண்கள் 31004770
22 தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி 2001ல் என்ன? ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 480 பேர்
23 தமிழ்நாட்டில் 2001ல் கல்வியறிவு எத்தனை சதவீதம்? 73.47 % (ஆண்கள் 86.81 % பெண்கள் 64.55 %
24 தமிழ்நாட்டில் 2001ல் ஆண்பெண் பாலின விகிதம் என்ன? 1000 ஆண்களுக்கு 987 பெண்கள்
25 தமிழ்நாட்டில் 2011ல் ஆண் பெண் குழந்தைகள் பாலின விகிதம் என்ன? 1000 ஆண்குழந்தைகள் 946 பெண் குழந்தைகள்
26 தமிழக மக்கள் தொகை இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 7வது இடத்தில்
27 தமிழக மக்கள் தொகை வளர்ச்சி இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 23வது இடத்தில்
28 தமிழக பாலினவிகிதம் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 11வது இடத்தில்
29 தமிழக பாலின விகிதத்தில் 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வகிதத்தில் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம்
30 தமிழகம் கல்வியறிவில் இந்திய அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம்

Comments