பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 1

 1. அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
 2. அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
 3. அகநிலா - விரிந்த நிலா
 4. அகம் - உள்ளம்
 5. அகழ்வாரை - தோண்டுபவரை
 6. அகன் - அகம், உள்ளம்
 7. அகன்று - விலகி
 8. அங்கை - உள்ளங்கை
 9. அசனி - இடி
 10. அஞ்சுகம் - கிளி
 11. அடவி - காடு
 12. அடிமைசெய்குவென் - பணிசெய்வேன்
 13. அணங்கு - தெய்வப்பெண்
 14. அணல் - கழுத்து
 15. அணி - அழகுக்காக அணியும் நகைகள்
 16. அணித்தாய் - அண்மையில்
 17. அணித்து - அருகில்
 18. அணியர் - நெருங்கி இருப்பவர்
 19. அதிசயம் - வியப்பு
 20. அத்தம் - காடு
 21. அமணர் - சமணர்
 22. அமர் - விருப்பம்
 23. அமர்ந்து - விரும்பி
 24. அமலன் - குற்றமற்றவன்
 25. அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
 26. அமையும் - உண்டாகும்
 27. அம் - அழகிய
 28. அம்பி - படகு
 29. அயர்ந்த - களைப்புற்ற
 30. அயலார் - உறவல்லாதோர்
 31. அயில் - கூர்மை
 32. அரசன்
 33. அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
 34. அரம்பை - வாழை
 35. அரம்பையர் - தேவமகளிர்
 36. அரவம் - பாம்பு
 37. அரவு - பாம்பு
 38. அரவுநீர்ச் சடையார் - சிவபெருமான்
 39. அரற்றி - அழு
 40. அரா - பாம்பு
 41. அரி - நெற்கதிர்
 42. அரியாசனம் - சிங்காதனம்
 43. அரு - உருவமற்றது
 44. அருத்தியன் - அன்பு உடையவன்
 45. அருவினை - செய்தற்கரிய செயல்
 46. அலகில - அளவற்ற
 47. அலகிலா- அளவற்ற
 48. அலகு இல் - அளவில்லாத
 49. அலங்கல் - மாலை
 50. அலறும் முழங்கும்
 51. அல் - இருள்இ இரவு
 52. அல்கு - இரவு
 53. அல்லல் - துன்பம்
 54. அல்லவை - பாவம்
 55. அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
 56. அவல் - பள்ளம்
 57. அவியினும் - இறந்தாலும்
 58. அழுக்காறு - பொறாமை
 59. அழுங்கி - மிக வருந்தி
 60. அளகு - கோழி
 61. அளக்கில் கேள்வியார் – அளவற்ற நூலறிவினர்
 62. அளவின்று - அளவினையுடையது
 63. அளைஇ - கலந்து
 64. அறிகை - அறிதல்வேண்டும்
 65. அறைகுவன் - சொல்லுவன்
 66. அறைந்த - சொன்ன
 67. அற்குற்ற - இருளையொத்த
 68. அற்று - அதுபோன்றது
 69. அற்றே - போன்றதே
 70. அனைத்தானும் - கேட்ட அளவிற்கு
 71. அனையார் - போன்றோர்
 72. அன்பகத்து இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத
 73. அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
 74. அன்னவர் - அத்தகைய இறiவா
 75. ஆ - பசு
 76. ஆகடியம் - ஏளனம்
 77. ஆகடியம் - ஏளனம்
 78. ஆகுலம ; - வணீ ;
 79. ஆக்கம் - செல்வம்
 80. ஆசவம் - தேன்
 81. ஆசனம் - இருக்கை
 82. ஆடவர் - ஆண்கள்
 83. ஆடி - கண்ணாடி
 84. ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
 85. ஆடூஉ - ஆண்
 86. ஆதிரம் - நெய்
 87. ஆபயன் - பால்
 88. ஆயகாலை - அந்தநேரத்தில்
 89. ஆயம் - ஆட்டம்
 90. ஆயம் - தோழியர் கூட்டம்
 91. ஆரணம் - வேதம்
 92. ஆருயிர் - அருமையான உயிர்
 93. ஆரை - கோட்டை மதில்
 94. ஆரைத்தான் - யாரைத்தான்
 95. ஆர் - அழகு
 96. ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
 97. ஆர்வம் - விருப்பம்
 98. ஆர்வலர் - அன்புடையவர்
 99. ஆழி - கடல்
 100. ஆழி - தேர்ச்சக்கரம்இ மோதிரம்
 101. ஆறு - நல்வழி
 102. ஆறு - வழி
 103. ஆற்றல் - வலிமை
 104. ஆற்றவும் - நிறைவாக
 105. ஆற்றுணா - தட்டுச்சோறு
 106. ஆற்றுவார் - செயல் செய்பவர்
 107. ஆனம் - குழம்பு
 108. ஆன்ற - உயர்ந்தஇ நிறைந்த
 109. இகல் - பகை
 110. இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
 111. இகுசு - மூங்கில்
 112. இசைபட - புகழுடன்
 113. இசைபெறுதல் - புகழ்பெறுதல்
 114. இடங்கர் - முதலை

Comments