தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. செப்.23-ல் எழுத்துத்தேர்வு.


தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (18.8.2017) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. செப்.23-ல் எழுத்துத்தேர்வு | தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக் கான போட்டித்தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வு செப் டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஆன் லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 27-ம் தேதி தொடங்கியது. ஏற் கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன் லைனில் (www.trb.tn.nic.in) விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல்முறையாக போட்டித்தேர்வு  இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படை யிலேயே நிரப்பப்பட்டு வந்தன. தொடக்கத்தில் மாவட்ட அள விலான பதிவுமூப்பு அடிப்படை யிலும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப் படையிலும் சிறப்பாசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். தற்போது தான் முதல்முறையாக போட்டித் தேர்வு மூலமாக சிறப்பாசிரியர் பணிநியமனம் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 100 மதிப்பெண் ணில் 90 மதிப்பெண் எழுத்துத்தேர் வுக்கும், எஞ்சிய 5 மதிப் பெண் வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் எழுத்துத்தேர்வில், ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண் ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப் படுவர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அப்போது, பதிவுமூப்புக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும். இறுதியாக எழுத்துத்தேர்வு மதிப் பெண், பதிவுமூப்பு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப் படையில் சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணியில் சேரும் சிறப்பாசிரியர்கள் உரிய கல்வித்தகுதி இருந்தால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  DOWNLOAD

Comments