Nobel Prizes 2013 | The Nobel Prize in Peace 2013 | நோபல் பரிசு 2013 : அமைதி

ஆல்பிரட் நோபல்  (Alfred Nobel) அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்று அமைதிக்கான பரிசு. அவரது உயிலிலின்படி அமைதிக்கான பரிசு ""யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக  இருக்கிறாரோ"" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். 

ஆல்பிரட் நோபலிலின் உயிலிலின்படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபலிலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னிலையில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம், ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.

2013-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை ஐ. நா. ஆதரவுடன் செயல்படும் ரசாயன ஆயுதங்களைக் கண்காணிக்கும் 'ரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனம்' OPCW- Organization for the Prohibition of Chemical Weapons) அமைப்புக்கு வழங்கப்படுகிறது. முறைசாராத ஆயுதங்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் நார்வீஜிய நோபல் குழு இந்நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணி மூலம் சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருக்கும் அமைப்பு இது. நெதர்லாந்தில் உள்ள இந்த ஓ.பி.சி.டபுள்யூ. அமைப்பு பெறவிருப்பது, 94-வது அமைதிக்கான நோபல் பரிசு ஆகும். உலகில் ரசாயன ஆயுதங்களை அழிப்பதில் பெரும் பங்கு வகிப்பதற்காக, ஓ.பி.சி.டபுள்யூ-வுக்கு அமைதிக்கான நோபல் வழங்கப்படுவதாக, நார்வே நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

'ரசாயன ஆயுதங்கள் தடுப்பு நிறுவனம்', உலக நாடுகள் ரசாயன ஆயுதங்கள் நிர்வகிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அரசுகளுக் கிடையிலான நிறுவனம் ஆகும். ரசாயன ஆயுதங்களை அழித்தல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை களில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. நடப்பு ஆண்டில், சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் படுவது தெரியவந்ததும், அது குறித்து துரிதமாக விசாரணைகள் நடத்தி, உரிய நடவடிக்கைகளுக்கு இந்த அமைப்பு வித்திட்டது கவனத்துக்குரியது.

இந்த அமைப்பின் ஆய்வாளர்கள் இந்தாண்டு ஆகஸ்ட் 21-இல், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலிலில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பிறகு, சிரியாவுக்கு வர ஆரம்பித்தார்கள். சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற சூழலிலில் ரஷ்யாவின் தலையீட்டால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இந்த சமரசத்தின் அடிப்படையில் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் சிரியாவில் ரசாயன ஆயுதங்களை அழிப்பதென்று முடிவெடுக்கப் பட்டது. இதன் மூலம் இந்த அமைப்பின் 190-வது உறுப்பு நாடாக ஆவதற்கு சிரியா ஒப்புக்கொண்டது.

இந்த வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு  (Organisation for the Prohibition of Chemical Weapons)  நெதர்லாந்தின் டென்ஹாக் நகரில் அமைந்துள்ளது. இது ஒரு பன்னாட்டு அரசுகளுக் கிடையேயான அமைப்பு ஆகும். இவ்வமைப்பு வேதி ஆயுத உடன்படிக்கையின்படி வேதியியல் ஆயுதங் களை பயன்படுத்தாதிருப்பதையும், கையிருப்பில் உள்ள ஆயுதங்களை அழிப்பதையும் சரிபார்க்கும் பணியினை செய்கின்றது. இச்சரிபார்க்கும் பணி உறுப்பு அரசுகள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையிலும், தள ஆய்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 

இந்த அமைப்பு 1997-இல் சிறந்த ரசாயன ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் நான்கு இலக்குகளைக் கொண்டதாகும். அவை

*    சர்வதேசச் சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் ரசாயன ஆயுதங்கள் யாவும் அழிக்கப்படுதல்.

*    புதிய ரசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்வதைத் தடுத்தல். 

*     ரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு எதிராகத் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்படி உலக நாடுகளுக்கு உதவுதல். 

*     ரசாயனப் பொருட்களைப் பாதகமில்லாத முறைகளில் பயன்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல். 

மேற்கண்ட இலக்குகளைச் செயல்படுத்துவதைத்  தனது நோக்கமாகக்கொண்டது இந்த அமைப்பு.
தொடங்கப்பட்டதிலிலிருந்து இன்று வரை 86 நாடுகளில் 5,000 ஆய்வுகளை இந்த அமைப்பு அரவமின்றியும் விளம்பரப்படுத்திக்கொள்ளாமலும் செய்திருக்கிறது. இந்த அமைப்பு ஆய்வு நடத்தியதிலேயே பெரிய நாடுகள் அமெரிக்காவும் ரஷ்யாவும்தான். ரசாயன ஆயுத ஒப்பந்தத்தில் சிரியா நீங்கலாக இதுவரை கையெழுத்திடாத நாடுகள் அங்கோலா, எகிப்து, வட கொரியா, தெற்கு சூடான். இஸ்ரேலும் மியான்மரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், கையெழுத்தானதை அவற்றின் அரசாங்கங்கள் அதிகாரபூர்வமாக  அங்கீகரிக்கவில்லை.

இந்த நிறுவனத்திற்கு அமைதிக் கான நோபல் பரிசு வழங்கியதை ஆதரித்து பல கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றன. அவற்றில் முக்கியமாக, ""உலக அமைதிக்கான பங்களிப்பை எங்கள் அமைப்பு ஆரவாரமின்றியும் உறுதியாகவும் செய்துவருகிறது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். கடந்த சில வாரங்களின் சூழல் எங்கள் பணியைச் சர்வதேசச் சமூகம் முழுவதற்கும் தெரியப்படுத்தியிருக் கிறது'' என்று நெதர்லாந்தின் டென் ஹாக்ஸ் நகரில் பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித் திருக்கிறார் இந்த அமைப்பின் இயக்குநர் அஹ்மத் உஸ்முக்.

"ரசாயன ஆயுதங்களின் பயன்பாடு, சர்வதேசச் சட்டத்தின்படி தடை செய்யப்பட வேண்டியது என்று இந்த அமைப்பும் 1997-ல் இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த ஒப்பந்தமும் சொல்கின்றன' என்று நோபல் பரிசின் பாராட்டுரை தெரிவிக்கிறது. "சமீபத்தில் சிரியாவில் நடந்த நிகழ்வுகள் இது போன்ற ஆயுதங்களை ஒழிப்பதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன என்றும் அந்தப் பாராட்டுரை' தெரிவிக்கிறது.

இந்த அமைப்பின் பணிக்கு உரிய  அவசரத் தன்மை, அபாயம் ஆகியவை காரணமாக இந்த அமைப்பு நோபல் பரிசை வெல்லும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. சிறுமிகளின் கல்விக்காகப் போராடி வருபவரும், அந்தப் போராட்டத்தில் தனது உயிரையே பணயம் வைத்தவருமான பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்குத் தான் இந்த விருது கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்தால் மிகவும் இளவயதில் நோபல் வென்றவராக அவர்தான் இருப்பார் என்றும் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய சில நாட்கள் பரபரப்பாகப் பேச்சு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments