தமிழ் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்-பேரறிஞர் அண்ணா

1. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் பாவாணர்
2. இன்றைய மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்தது
3. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் போது நம் சமுதாயத்தில் தலைகீழ் புரட்சி ஏற்படும் என்றவர் பெரியார்
4. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று சொத்துரிமை இல்லாமை
5. 1918இல் மும்பையில் அம்பேத்கர் சிறிது காலம் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
6. அம்பேத்காருக்கு இந்திய அரசு வழங்கிய விருது பாரத ரத்னா
7. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை பேச்சுக்கலை
8. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் பேரறிஞர் அண்ணா
9. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல் தேவாரம்
10. உலகம் என்ற தமிடிநச் சொல் உலவு என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.
11. தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
12. காந்தியடிகள் சிரவணபிதுர்பத்தி நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்.
13. பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் பைபிள்
14. அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை அன்பு, அருள்
15. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் பெரியபுராணம்
16. வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கர்
17. பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு
18. விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் பாடலின் ஆசிரியர் தாராபாரதி
19. தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் மணக்கொடை
20. சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரி செய்தசெய்தியை எடுத்துரைக்கும் நூல் மணிமேகலை
21. தமிழர் மனித வாடிநவை அகம் புறம் எனப் பிரித்தனர்.
22. குமரிக் கண்டத்தில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்.
23. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் மாக்சுமுல்லர் ஆவார்.
24. சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.
25. பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர்;மூடக்கருத்துகளை முட்டறுத்தவர்.
26. வெறும் பேச்சுக்கும் மேடைப் பேச்சுக்கும் வேறுபாடு உண்டு.
27. பேச்சு முடிவில் சுருக்கத்தைக் கூறி கருத்தை நிலைநாட்டி முடிக்க வேண்டும்.
28. நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்புக் கலையைக் கற்றுத்தருபவரையும் இயக்குநர் என அழைப்பர்.
29. படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு.
30. இயங்கும் படங்களைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
31. இலெமூரியாவை மனித நாகரிகத் தொட்டில் என்பர்.
32. தனக்குவமையில்லா ஒரு தனிஇனம் தமிழ் இனம்.
33. அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் எனக் கூறியவர் அரிச்சந்திரன்.
34. திருக்குறளை மொழி பெயர்த்த உருசிய அறிஞர் தால்சுதாய்.
35. இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம் வடலூர்.
36. இராமலிங்கர் தமிடிந மொழியை இறவாத நிலை தரும் என்று கருதினார்.
37. சங்க காலத்தில் பெண்கள் கடல் கடந்து செல்லக் கூடாது.
38. நாள்தோறும் கல்வியில் புதுப்புதுத்துறைகள் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
39. காவலர், இராணுவம் போன்ற பணிகளுக்கு உடற்கூறு தேர்வும், எழுத்துத் தேர்வும் உண்டு.

Comments

Post a Comment