தாவரவியல் | பிளஸ் டூ வினா விடை


பிளஸ் டூ | தாவரவியல்
செயற்கை வகைப்பாட்டை உருவாக்கியவர்-கரோலஸ் லின்னேயஸ்
கரோலஸ் லின்னேயஸ் சுவிடன் நாட்டை சேர்ந்தவர்.
ஸ்பீஸிஸ் பிளாந்தாரத்தில் 24 வகுப்புக்களும் 7300 சிற்றினங்களும் உள்ளன.
சார்லஸ் டார்வின் சிற்றினங்களின் தோற்றம் என்ற நூல் மரபுவழி வகைப்பாடு தோன்ற துண்டுதலாக அமைந்தது.
மரபுவழி வகைப்பாட்டை உருவாக்கியவர்கள் எங்ளர் மற்றும் பிராண்டல்
பரிசோதனை வகைப்பாட்டியல் என்ற சொற்களை வழக்கத்திற்கு கொண்டுவந்தவர்கள் கேம்ப் மற்றும் கில்லி
இருசொல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் காஸ்பர்டு பாஹின்
இரு சொல் பெயரிடும் முறையை சரியான முறையில் கையாண்டவர் கரோலஸ் லின்னேயஸ்
உலகின் மிகப்பெரிய தாவரவியல் தோட்ட ஹெர்பேரியம் கியூ - லண்டனில் உள்ளது.
இந்திய தாவரவியல் தோட்டம் கொல்கத்தா வில் காணப்படுகிறது.
இனப்பெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுவது செயற்கை முறை வகைப்பாடு
ஜெனிரா பிளாண்டாரம் என்ற நூலை வெளியிட்டவர் பெந்தம் மற்றும் ஹீக்கர்
சூலகமேல் மலர் மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட சூலிலைகள் உடைய மலர்களை கொண்ட வரிசை ஹெட்டிரோமிரே
இன்ப்பெரே வரிசையில் 3 துறைகள் மற்றும் 9 குடும்பங்கள் உள்ளன.
மூவங்க மலர்கள் காணப்படும் வகுப்பு மானோகாட்டிலிடனே
போடோஸ்டெம்மேசி இடம் பெற்றுள்ள வரிசை மானோகிளாமிடே
பெந்தம் மற்றும் ùஹுக்கர் வகைப்பாட்டில் தற்கால துறைகள் கோஹார்ட்டுகள் என அழைக்கப்பட்டன
சூல்கள் திறந்த நிலையிலுள்ள தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள்
புறப்புல்லி வட்டம் காணப்படாத மால்வேசி தாவரம் அபுட்டிலான் இண்டிகம்
ஓரறை உடைய மகரந்தப்பை காணப்படும் குடும்பம் மால்வேசி
மால்வேசி குடும்பம் தலாமி*புனோரே வரிசையை சேர்ந்தது.
ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்ஸின் கனி வகை சூலக அறை வெடிகனி
சிறுநீரக வடிவ மகரந்தப்பை காணப்படும் குடும்பம் மால்வேசி
சொலானேசி இடம்பெற்றுள்ள வரிசை பாலிமோனியேல்ஸ்
வெண்டையின் இருசொல் பெயர் ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ்
நிலையான புல்லிவட்டம் காணப்படும் குடும்பம் சொலானேசி
சூலகத்தில் போலியான அறை குறுக்குச்சுவர் காணப்படுடும் தாவரம் டாட்டுரா மெட்டல்
அட்ரோபின் அட்ரோபா பெல்லடோனா தாவர வேர்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
டாட்ரா ஸ்ட்ராமோனியம் தாவர இலைகளிலிருந்து பெறப்படும் மருந்து ஸ்ட்ரமோனியம்
பெத்தம் என்ற ஹீக்கர் வகைப்பாட்டில் என்றும் குடும்பங்கள் துறைகள் என்று அழைக்கப்பட்டன.
நிகோட்டின் நிகோட்டியானா டொபாக்கம் தாவத்திலிருந்து பெறப்படுகிறது.
யூபோர்பியேசி குடும்பம் யூனிசெக்சுவேல்ஸ் வரிசையைச் சார்ந்தது.
யூபோரிபியேசி குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பேரினங்கள் எண்ணிக்கை 300
அக்காலிபா இன்டிகா தாவரத்தில் காட்கின் மஞ்சரி உள்ளது.
ரெஸினஸ் கம்யூனிஸ் தாவரத்தின் கனி வகை ரெக்மா
பால் புதர் என அழைக்கப்படும் தாவரம் யூப்போர்பியா திருக்கள்ளி
கிளாடோடுக்கு எடுத்துக்காட்டுகள் யூ.திருக்கள்ளி. யூ.ஆண்டிகோரம்
ரெஸினஸ் கம்யூனிஸ் ஒரு புதர்ச்செடி
ஹீவியா பிரேசிலியன்சிஸ் தாவரத்தின் இலை மூன்று சிற்றிலையுடைய கூட்டிலை
மியூசேசி குடும்பம் சார்ந்துள்ள வரிகை எபிகைனே
ராவனெல்லா மடகாஸ் கரியன்சிஸ் தாவரம் மியூசேசரி குடும்பத்தின் மரம் ஆகும்.
ராவனெலாத் தாவரத்தின் இலையமைவு இரு வரிசை
மியூசா தாவரத்தின் மஞ்சரி கிளைத்த ஸ்பேடிக்ஸ் ஆகும்.
மியூசா ஒரு பாலிகேமஸ் தாவரம்
மியூஸா தாரவத்தின் கனி விதைகளற்ற நீண்ட சதைப்பற்றுள்ள பெர்ரி ஆகும்.
மியூஸா டெக்ஸ்டைலிஸ் மணிலா நார்த்தாவரம் எனவும் அழைக்கப்படும்.
ராவனெல்லா மடகாஸ் கரியன்சிஸ் தாவரம் பயணிகளின் பனை எனவும் அழைக்கப்படுகிறது.
ஸ்டெரிலிட்சியா. ரெஜினே தாவரம் பறவைகளின் சொர்க்க மலர் என அழைக்கப்படுகிறது.
மியூசா தாரவத்தின் இலையமைவு சுழல் முறை
ராவனெலா மடகாஸ்கரியன்ஸில் தாவரத்தின் மஞ்சரி கூட்டு சைம்
ராவனெலா மடகாஸ்கரியன்ஸிஸ் தாவரத்தின் வளமான மகரந்த தாள்களின் எண்ணிக்கை 6
உயிர் உள்ள ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் ரானேல்ஸ் துறை எளியவை தொன்மையனவை
நடு நரம்பு மற்றும் பக்க நரம்புகளின் மீது மஞ்சள் நிறம் காணப்படும் தாவரம் சொலானம் சாந்தோகார்பம்
தொடர்ந்து பகுப்படையும் தன்மைகொண்ட செல்களால் ஆன தொகுதி ஆக்குத்திசு
ஆக்குத் திசுவின் பகுதி நிலைத்த திசுவாக மாறும் நிகழ்ச்சி வேறுபாடு அடைதல்
தாவரத்தின் அனைத்து திசுக்களிலும் பொதுவாக காணப்படும் திசு பாரன்கைமா
வாஸ்குலார் கேம்பியம் பக்க ஆக்குத்திசுவாகும்.
கார்க்கர்ம்பியத்தின் வேறு பெயர் பெல்லோஜன்
காற்றறைகள் நிறைந்த பாரன்கைமா ஏரன்கைமா எனப்படுகின்றன.
ஸடார்ச் துகள்கள் நிறைந்த பாரன்கைமா சேமிப்பு பாரன்கைமா எனப்படும்
குளோரேன்கைமா திசுவின் பணி ஒளிச்சேர்க்கை ஆகும்.
இருவித்திலை தாவர தண்டின் ஹைபோடெர்மிஸ் கோலன்கைமா திசுக்களால் ஆனவை.
கோண கோலன்கைமாவிற்கு எடுத்துகாட்டு டாட்டுரா
இடைவெளி கோலன்கைமாவிற்கு எடுத்துக்காட்டு ஐப்போமியா
விதை உறையின் கடினத் தன்மைக்கு காரணமான செல் ஸ்கீளிரைடுகள்
பேரிக்கனியின் தளத்திசுவில் காணப்படும் செல் பிராக்கிஸ்கிளிரைடு (எ) கல் செல்
வேர் தூவிகள் டிரைக்கோபிளாஸ்ட் லிருந்து உருவாகின்றன.
எலும்பு செல்கள் எனப்படுவது ஆஸ்டியோ ஸ்கீளிரைடு அது காணப்படும் பகுதி பட்டாணி விதை உறை
தாவரத்தின் தாங்குதிசு எனப்படுவது நார்கள்
கல் செல்கள் எனப்படுவது பிராக்கிஸ்கீளிரைடு
ஹீலியாந்தஸ் தாவரத்தின் ஹைபோடெர்மிஸ் அடுக்கு கோலன்மைவால் ஆனது.
ஜிம்னோஸ்பெர்ம்களிலும். டெரிடோபைட்டுகளிலும் நீரை கடத்தும் முக்கிய கூறு ட்ரக்கீடுகள்
ஒற்றை துளை தட்டு காணப்படும் தாவரம் மாஞ்சிஃபெரா
பல துளை தட்டு காணப்படும் தாவரம் லிரியோடென்ட்ரான்
ஜிம்னோஸ்பெர்ம்களிலும். டெரிடோபைட்டுகளிலும் காணப்படாத சைலக்கூறு சைலக்குழாய்கள்
சைலக் குழாய் காணப்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் நீட்டம்
சைலம் நார்கள் லிபிரிஃபார்ம் என்றும் புளோயம் நார்கள் பாஸ்ட் நார்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
சைலம் பாரன்கைமா செல்சுவர்கள் செல்லுலோஸ் பொருளால் ஆனது.
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மட்டும் காணப்படும் புளோயப்பகுதி துணை செல்கள்
புளோயம் திசுவில் காணப்படும் உயிரற்ற செல் புளோயம் நார்கள் சைலத்திóல் உள்ள உயிர் உள்ள செல் சைலம் பாரன்கைமா
புறத்தோல் துளையை சூழந்துள்ள சிறப்பு செல்கள் காப்பு செல்கள்
வேரின் புறத்தோலில் உள்ள குட்டை செல்கள் டிரைகோபினாஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.
துணை செல்கள் காணப்படாத தாவரம் ஜிம்னோஸ்பெர்ம். டெரிடோஃபைட்
ஆரப்போக்கு அமைவு வாஸ்குலார் கற்றை வேர்களி ல் காணப்படுகிறது.
இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை குக்கர்பிட்டா தாவரத்தில் உள்ளது.
புளோயம் குழ் வாஸ்குலார் கற்றைக்கு எடுத்துக்காட்டு பாலிபோடியம்
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றைக்கு எடுத்துக்காட்டு அக்கோரஸ்
பக்கவேர்கள் பெரிசைக்கிள் பகுதியிலிருந்து தோன்றுகின்றன.
பித் பகுதியின் வேறு பெயர் மெடுல்லா (அ) அகணி
புறணியின் கடைசி அடுக்கு அகத்தோல்
காஸ்பாரின் பட்டைகள் காணப்படாத அகத்தோல் செல்கள் வழிச்செல்கள்
ஸடீலின் வெளிப்புற அடுக்கு பெரிசைக்கிள்
பல முனை சைலம் ஒரு வித்திலை வேரி ல் காணப்படுகின்றன.
மக்காச்சோளத்தின் இணைப்புதிசு ஸ்கீளிரென்கைமா செல்களால் ஆனது.
வேரின் வெளிப்புற அடுக்கு ரைசோடெர்மிஸ்
நான்கு முனை சைலம் இரு வித்திலை வேரி ல் காணப்படுகிறது.
ஒரு வித்திலை தாவரத்தண்டின் ஹைப்பேடெர்மிஸ் ஸ்கீளிரென்கைமா செல்களால் ஆனது.
சிதறிய வால்குலர் கற்றைகள் ஒரு வித்திலைத் தாவரத்தண்டு ல் காணப்படுகிறது.
புரோட்டோ சைல இடைவெளி ஒரு வித்திலைத் தாவரத்தண்டு ல் காணப்படுகிறது.
க்யூட்டிகிள் கியூட்டின் பொருளால் ஆனது.
கற்றைக் தொப்பிகள் ஸ்கிளிரென்கைமா செல்களால் ஆனது.
ஸ்டெல்லேட் பாரன்கைமா காணப்படும் தாவரம் வாழை-கல்வாழை
மேல் கீழ் வேறுபாடு கொண்ட இலைகள் இருவித்திலை தாவரத்தில் காணப்படுகிறது.
இரு பக்கமும் ஒத்த அமைப்புடைய இலைகள் ஒருவித்திலை தாவரத்தில் காணப்படுகிறது
இரு வித்திலை தாவர இலையின் வாஸ்குலார் கற்றையை சூழ்ந்துள்ள உறை கற்றை உறை எனப்படும்.
காஸ்பாரியன் பட்டைகள் சூபரின் பொருளால் ஆனது.
ஒரு வித்திலை தாவர தண்டின் வாஸ்குலார் கற்றை மண்டை ஓடு வடிவமானது.
பாரம்பரியத்தின் அடிப்படை அலகு எனப்படுவது ஜீன்கள்
குரோமோசாம்கள் என்ற பெயரை அறிமகப்படுத்தியவர் வால்டேயர்
குரோமோசோம்களில் ஜீன்கள் உள்ளதை முதன் முதலில் உறுதி செய்தவர் பிரிட்ஜஸ்
இரு சகோதரி குரோமேடிடுகள் இணைந்துள்ள மையப்பகுதி சென்ட்ரோமியர்
குரோமோசோமின் நுனிப்பகுதி டீலோமியர் என அழைக்கப்படும்.
பால் நிர்ணயத்தில் பங்கு கொள்ளும் குரோமோசோம்கள் இனகுரோமோசோம்
செனட்ரோமியரும் டீலோமியரும் காணப்படாத குரோமோசோம்கள் டபுள் மினிட்ஸ் எனப்படும்.
டபுள்மினிட் குரோமோசோம்கள் புற்றுநோய் செல்களில் காணப்படுகின்றன.
பாலிடீன் குரோமோசோம்களை முதன் முதலில் கண்டறிந்தவர் C.G.பால்பியானி
பாலிடீன் குரோமோசோம்கள் டிரோசோபிலா உயிரினத்தில் முதன் முதலில் கண்டறிந்தனர்.
விளக்கு தூரிகை குரோமோசோம்களை முதன் முதலில் கண்டறிந்தவர் பிளம்மிங்
விலங்கின ஊசைட்டுகளில் குன்றல் பகுப்பின் புரோபேஸ் -I. டிப்ளோடின் நிலையில் விளக்கு தூரிகை குரோமோசோம் காணப்படுகிறது.
ஜீன் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ர. ஜோஹான்சன்
ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாட்டை உருவாக்கியவர் பீடில் மற்றும் டாட்டம்
பீடில் மற்றும் டாட்டம் ஆய்வு செய்த உயிரினம் நியூரோஸ்போரா
இணைப்பும். விலகுதலும். பிணைப்பு நிகழ்ச்சியின் இரு கூறுகளாகும்.
இணைப்பின் சோதனை கலப்பு விகிதம் 7 : 1 : 1 : 7
விலகுதலின் விகிதம் 1 : 7 : 7 : 1
குரோமோசோமின் ஜீன்கள் இடம்பெற்றுள்ள பகுதி லோகஸ்
மரபு வரைபடத்தின் அலகு மார்கன்
குறுக்கேற்றம் புரோபேஸ் I- பாக்கைடீன் நிலையில் நடைபெறுகிறது.
திடீர் மாற்றத்தினை முதன் முதலில் கண்டறிந்தவர் ஹியூகே டிவ்ரிஸ்
ஹீகோ டிவரிஸ் திடீர் மாற்றத்தை முதன் முதலில் கண்டறிந்த தாவரம் ஈனோதிரா லாமார்க்கியானா
திடீர் மாற்றம் அடைந்த உயிரினம் மியூடன்ட் என்று அழைக்கப்படுகிறது.
உயிர் வேதிவினை திடீர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு நியூரோஸ்போரா
கொல்லி திடீர் மாற்றம் சோளம் தாவரத்தில் அறியப்பட்டது
திடீர் மாற்றத்தில் ஒரு பிரிமிடினுக்கு பதிலாக வேறு பியூரின் இணைவது பதிலீடு எனப்படும்.
நல்லி சோமின் குறியீடு 2n-2
பிரடரிக் கிரிஃபித் ஆய்வு செய்த பாக்டரியா டிப்ளோகாக்கஸ்
டி.என்.ஏ வின் இரட்டை சுருள் மாதிரியை உருவாக்கியவர் வாட்சன் மற்றும் கிரிக்
டி.என்.ஏ இரட்டிப்படைதலின் பாதி பழமை பேணும் முறையை உறுதிப்படுத்தியவர்கள் மீசில்சன்மற்றும்ஸ்டால்
டி.என்.ஏ இரட்டை சுருளினை பிரிக்கும் நொதி ஹெலிகேஸ்
டி.என்.ஏ வின் அதிக சுருள் பகுதியை தளர்க்க உதவும் நொதி டோபோஜசோமெரேஸ்
டி.என்.ஏ வின் துண்டுகளை இணைக்கப்பயன்படும் நொதி லைகேஸ்
டி.என்.ஏ வின் கார இணை விதிகளை உருவாக்கியவர் எர்வின் சார்காப்
கடத்து ஆர்.என்.ஏ வின் வேறுபெயர் கரையும் RNA (or) sRNA
நிலைப்புத்தன்மை கொண்ட ஆர்.என்.ஏ ரிபோசோமல் RNA(or) rRNA
குளோவர் இலை மாதிரி டி.ஆர்.ஏ வை வெளியிட்டவர் R.W ஹோலி
டி.என்.ஏ வின் மூலக்கூறின் விட்டம் 20AO
பெரும்பாலான தாவர வைரஸ்களில் RNA மரபு பொருள்.
ரெஸ்டரிக்சன் நொதியை உற்பத்தி செய்பவை பாக்டீரியா க்கள் ஆகும்.
ரெஸ்டரிக்சன் என்டோ நியூக்ளியேஸ் டி.என்.எ-வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் துண்டிக்கிறது.
எ.கோலையில் காணப்படும் சிறுவட்டவடிவ தூண்டுகள் பிளாஸ்மிட் எனப்படும்.
செல் சவ்வில் மின்புலத்தை ஏற்படுத்தி துளைகளை தோற்றுவிக்கும் முறைமின்துளையாக்கம் எனப்படும்.
தாவர செல்களின் அயல் ஜீனை புகுத்துவதற்கு பயன்படும் பாக்டீரியம் அக்ரோபேக்டீரியம் டியூமிபேசியன்ஸ்
பாஸ்டா எனப்படும் கலைக்கொல்லியை செயல்இழக்கபயன்படும் நொதி ஸ்ட்ரெப்டோமைசிஸ்,ஹைக்ரோஸ்கோபிகஸ்லிருந்து பெறப்படுகிறது.
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் பாக்டீரியாத்திலிருந்து உருவாகும் நச்சுப்புரதம் எண்டோடக்சின்
அசகாயபூச்சி எனப்படும் பாக்டீரியம் சூடோமோனாஸ் பூடிடா
சூடோமோனாஸ் பூடிடா பாக்டீரியாத்தை உருவாக்கியவர் ஆனந்த மோகன் சக்கரவர்த்தி
சுற்றுசுழல் மாசுப்பட்டை தவிர்க்க நுண்ணுயிர்களை ஈடுப்படுத்தும்முறை உயிரிகளால் சீரமைக்கப்படுதல் எனப்படும்.
ஒழுங்கற்ற வேறுபாடு அடையாத திசு திரள் காலஸ் எனப்படும்.
கேலஸில் இருந்து தண்டு தோன்றுவது காலோஜெனிஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது.
கேலஸ் திசுவிலிருந்து வேர் தோன்றுவது ரைசோஜெனிஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது.
கேலஸ் திசுவிலிருந்து தோன்றும் கருக்கள் எம்பிரியாய்டுகள் என்று அழைக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட புரோட்டோ பிளாஸ்ட்டுகளை இணைக்கும் காரணி PEG (அ) எத்திலீன்கிளைகால்
தனிசெல் புரதமாக (SCP) பயன்படும் பாசி ஸ்பைருவினா
மனிதன் உட்கொள்ள தகுந்த வைட்டமின் செரிந்த மாத்திரைகள் ஸ்பைருவினாலிருந்து பெறப்படுகிறது.
ஆதார டி.என்.ஏ யையும் ஒம்புயிரி டி.என்.ஏ வை இணைக்கும் செயல் மூலக்கூறு ஒட்டுதல் எனப்படும்.
மகுட கழலை நோயை உண்டாக்கும் பாக்டீரியா அக்ரோ பாக்டீரியம் டியூமிபேசியன்ஸ்
சைட்டோ கைனனின் மூலம் திசு வளர்ப்பின் மூலம் உருவாக்கப்படும் காலஸ்
அயல்ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படும் முறை மின் துளையாக்கம்/நேரடி (அ) ஜீன் துப்பாக்கி
அயல்ஜீனை பெற்ற இருவித்திலை தாவரகளின் எண்ணிக்கை 50-க்கு மேல்
ஜீன் இடமாற்றம் அடைந்த சூடோமோனாஸ் ஹைடிரோகார்பன்களை சிதைக்கிறது.
மாண்டக்டா செக்ஸ்டா என்ற பூச்சியின் தாக்குதலுக்கு உள்ளாகும் தாவரம் புகையிலை /பாக்டீரியம்
எண்டோ டாக்சினை உண்டாக்குவது பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல் உறுப்பு பசுங்கணிகம்
பசுங்கனிகத்தில் காணப்படும் தட்டுவடிவம் உடைய அமைப்புகள் தைலக்காய்டுகள்
சுழற்சி எலக்டரான் கடத்திலின் பொழுது உண்டாவது ATP மட்டும்
இருள் மறுவினையை கண்டறிந்தவர் மெல்வின் கால்வின்
C 4 வழிதடத்தை விவரித்தவர்கள் ஹேட்ச் மற்றும் ஸ்லாக்
C 4 வழிதடத்தில் முதலில் தோன்றும் சேர்மம் ஆக்ஸ்லோ அசிட்டிக் அமிலம் (OAA)4c
C 4 தாவரத்திற்கு எடுத்துக்காட்டு கரும்பு
C 4 தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்கள் இலை இடைத்திசு மற்றும் கற்றை உறை
ஒளிசுவாசம் நடைபெறும் செல் உறுப்புகள் பசுங்கணிகம். பெராக்ஸிஸோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா
ஒளிசுவாசத்தின் வேறுபெயர்கள் C 2 சுழற்சி (அ)ஒனிச்சேர்க்கை கார்பன் ஆக்ஸிஜனேற்றசுழற்சி
ஒளிச்சேர்க்கை திறன்பட தூண்டவல்ல அலைநீளம் 400nm 700nm
இருவடிவ பசுங்கனிகம் கொண்ட தாவரம் கரும்பு
ஒளிச்சேர்க்கையின் இறுதி பொருள் DHAP
C 3 வழிதடத்தில் CO2 வை ஏற்கும் பொருள் RUBP
பச்சயம் உருவாக காரணமாகும் தனிமம் மெக்னீசியம் (Mg)
தொற்றுதாவர வேர்களில் காணப்படும் பஞ்சுபோன்ற திசு வெலாமன்
முழு ஒட்டுண்ணி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு கஸ்குட்டா
பகுதி ஒட்டுண்ணி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு விஸ்கம்
பூச்சி உண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறைக்காக உருமாற்றம்அடைந்துள்ளது.
சூரிய பனித்துளி எனப்படும் தாவரம் ட்ரஸீரா
இருள் சுவாசம் நடைபெறும் இடம் பசும்கணிகம்
சுவாசத்தில் பொதுவாக பயன்படும் தளப்பொருள் கார்போஹைட்ரேட்
செல்லின் ஆற்றல் நாணயம் எனப்படுவது ATP
கிளைக்காலிஸின் வேறுபெயர் EMP வழித்தடம் (அ) இனிப்பு பிளப்பு
கிளைக்காலிஸின் இறுதிபொருள் பைருவிக் அமிலம்
பென்டோஸ் பாஸ்பேட் வழிதடத்தை கண்டுபிடித்தவர் டிக்கன்ஸன்
காற்றில்லா சுவாசம் நடைபெறும் இடம் சைட்டோபிளாசம்
கொழுப்பு அமிலத்தின் சுவாச ஈவு 0.36. குளுகோஸ்சின் சுவாச ஈவு 1
முதன் முதலில் கண்டறியப்பட்ட தாவர ஹர்மோன் ஆக்ஸின்கள்
செயற்கை ஹார்மோன்களுக்கு எடுத்துக்காட்டு NAA
பக்கானே நோய் நெல் தாவரத்தில் கண்டறியப்பட்டது.
நெல்லின் கோமாளி தன நோயை உருவாக்குவது ஜிப்ரெலின்கள்
ஜிப்ரெலின்கள் பியுஜிகோரை தாவரத்திலிருந்து ஜிப்ரலின் பெறப்படுகிறது.
செல் பிரிதலை தூண்டும் ஹார்மோன் சைட்டோகைனின்
சைட்டோகைனினை முதன் முதலில் பிரித்தெடுத்தவர்கள் மில்லர் மற்றும் ஸ்கூஜ்
மக்காச்சோளத்தில் காணப்படும் சைட்டோகைனின் சியாட்டின் ஆகும்.
தாவரங்கள் முதுமை அடைவதை தாமதப்படுத்தும் ஹார்மோன் சைட்டோகைனின்
வாயு நிலையில் உள்ள ஹார்மோன் எத்திலின்
கனிகள் பழுப்பதலில் பங்காற்றும் ஹார்மேன் எத்திலின்
ஒளிகாலத்துவம் முதன் முதலில் அறியப்பட்ட தாவரம் மேரிலாண்ட் மாமூத்
பைட்டோ குரோமை கண்டறிந்தவர் பட்லர் மற்றும் குழுவினர்
வெர்னலைசேஷன் என்ற பெயரை அறிமுகப்படுத்தியர் T.D லை சென்கோ
நிலத்தில் உள்ள களைகளை நீக்கிட பயன்படும் ஹர்மோன் 2-4- D
குறும்பகல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு புகையிலை மற்றும் கிரைசாந்தியம்
நீள் பகல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு கோதுமை மற்றும் ஒட்ஸ்
இலைத்துளை மூடுதலை தூண்டும் ஹார்மோன் ABA
இலை உதிர்தலை தடைசெய்யும் ஹார்மோன் ஆக்ஸின்
முழுமையான ஆக்சிஜனைற்றம் அடையும் குளுக்கோஸ்ஸிலிருந்து கிடைப்பது 38 ATP
ATP -யின் மிகையாற்றல் பிணைப்புகளின் எண்ணிக்கை 2
செல்சுவரின் செல்லுலோஸ் சிதைக்கும் நொதி செல்லுலேஸ்
அசோலா என்ற நீர்பெரணியில் காணப்படும் பாக்டீரியம் அனாபினா அசோலே.
இந்திய வயல்வெளிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உயிரி உரம் அசோலா பின்னேட்டா
தாவர வேர்களின் வெளிப்புறப் பரப்பில் காணப்படும் வேர் எக்டோட்ராபிக் மைக்கோ ரைசா
நெல்லின் வெப்பு நோயை உண்டாக்கும் நோய் உயிரி பைரிகுலேரியா ஒரைசே
நிலக்கடலையில் டிக்கா நோயை ஏற்படுத்தும் நோய் உயிரி செர்க்கோஸ் போரா பெர்சனேடா
எலுமிச்சை கேன்கர் நோயின் நோய் உயிரி சாந்தோமோனாஸ் சிட்ரி
நெல்லின் தூங்குரோ நோய் இலைப் பூச்சி மூலம் பரவுகிறது.
பைரித்திரம் கிரை சாந்திமம் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
வைரசுக்கு எதிராக பயன்படும் புரதப்பொருள் இன்டர் பெராண்கள்
சர்க்கரையைக் காட்டிலும் 100 மடங்கு இனிப்பு கொண்ட புரதம் பிரேசின்
தேநீரு பதிலாக பயன்படுத்தப்படும் தாவர இலை ஐலக்ஸ் பராகுவென்சிஸ்
காப்பிக்கு பதிலாக பயன்படுத்தப்படும் விதை தூள் கோலா நிட்டிடா
மார்ஃபின் பப்பாவர் சாம்னிஃபெரம் செடியிலிருந்து பெறப்படுகிறது.
குயினைன் சின்கோனா அஃபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
டிஜாக்ஷின் மருந்துப்பொருள் டிஜிடாலிஸ் பெறப்படுகிறது.
எஃபிட்ரா சைனிக்கா என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் மருந்து எஃபிட்ரின்
ஜின்ஜங்க் மருந்து ஜின் செங்கிலிருந்து பெறப்படுகிறது.
இந்திய அகாலிபா எனப்படும் தாவரம் அகாலிபா இன்டிகா
எலும்பு இணைவி எனப்படும் தாவரம் சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்(பிரண்டை)
பெனிசில்லின் கிடைக்கும் தாவரம் பெனிசிலியம் நொட்டேட்டம்
ஜப்பானில் நெல்லிலிருந்து பெறப்படும் போதை பொருள் சாகோ
சர்க்கரையை காட்டிலும் 100 மடங்கு இனிப்பு கொண்ட தாவரம் பென்டாடைப்ளான்ட்ரா பிரேசிலானா
வில்வம் தாவரத்தின் இருசொற்பெயர் ஏகில் மார்மிலாஸ்
அகாலிபைன் அகாலிபா இண்டிகா தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
பசுந்தாள் உரமாக பயன்படும் தாவரம் குரோட்டலேரியா ஜன்சியா
புற்றுநோய்க்கு எதிரான மருந்து காணப்படும் தாவரம் வின்கா ரோசியா
கால்சிசின் பன்மயங்களை யை தூண்டப்பயன்படுகிறது.
நைட்ரசோமோனஸ் பாக்டீரியா அமோனியாவை நைட்ரேட்டாக மாற்றுகிறது.
அபின் தரும் பாப்பி செடியிலிருந்து மார்பின் என்ற அதி வலிமை மிக்க வலி நீக்கி பெறப்படுகிறது.
பேபேசி குடும்பத்தின் நீர்வாழ் தாவரம் ஆஸ்கினோமினி ஆஸ்பெரா
ஃபேபேசி குடும்ப தாவர வேர் முண்டுகளில் காணப்படும் பாக்டீரியம் ரைசோபியம்
காட்டுத் தீ எனப்படும் தாவரம் ப்யூட்டியாஃபிராண்டோசா
அதப்புடைய இலைக்காம்பு கொண்ட குடும்பம் பேபேஸி
ஃபேபேசி குடும்பத்தின் அல்லி வட்டத்தில் காணப்படும் இதழமைவு இறங்கு தழுவு இதழ் அமைவு
ஃபேபேசி குடும்பத்தின் அல்லி வட்டம் வண்ணத்துப்பூச்சி வடிவ அல்லிவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஃபேபேசி குடும்ப தாவர சூலகத்தின் காணப்படும் சூல் ஒட்டுமுறை விளிம்பு சூல் ஒட்டுமுறை
5+5 இருகற்றை மகரந்தம் காணப்படும் தாவரம் ஆஸ்கினோமினி ஆஸ்பெரா
இக்ஸோரா காக்ஸினியாவில் குறுக்குமறுக்கு எதிரிலைமைவு இலையமைவு.முறை உள்ளது.
மொரிண்டாவில் கூட்டுகனி கனி உள்ளது.
பர்புரின் சாயம் ரூபியாடிங்டோரியா தாவர வேரிலிருந்து பெறப்படுகிறது.
வேர்க்கிழங்கு காணப்படும் ஆஸ்ட்ரேஸி தாவரம் டாலியா காக்ஸினியா
வட்ட இலையமைவு காணப்படும் ஆஸ்ட்ரேசி தாவரம் யுப்படோரியம்
ஆஸ்ட்ரேசி குடும்பத்தின் சிரமஞ்சரி மஞ்சரி எது.
சிர மஞ்சரியின் தனிமலராக குறுக்கம் அடைந்துள்ள தாவரம் எக்சினாப்ஸ்
ஆஸ்திரேசியின் புல்லி வட்டம் பேப்பஸ் தூவி உருமாற்றம் அடைந்துள்ளது.
சின்செனிஷியஸ் மகரந்தம் காணப்படும் குடும்பம் ஆஸ்ட்ரேசி
சான்டானின் என்ற மருந்து ஆர்டிமிசியா மாரிட்டிமா தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
கொசு விரட்டியாக பயன்படும் பைரித்திரம் கிரைசாந்தியம் சினரிபோலியத்தில் பெறப்படுகிறது.
பாட்மாரிகோல்டு என்படுவது காலெண்டு அஃபிஸினாலிஸிஸ்
அரிகேசி குடும்பம் இடம்பெற்றுள்ள வரிசை காலிசினே
கோகாஸ் நியூசிஃபெராவில் உள்ள மஞ்சரி வகை கூட்டு ஸ்பாடிக்ஸ் மஞ்சுரி
பணை எண்ணெய் எந்த தாவரத்திலிருந்து எலாயிஸ் கைனென்சிஸ்
கல்ப விருட்சம் எனப்படும் தாவரம் கோகாஸ் நியுசிஃபெரா
என்சைம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் கூன்
புரதமும். புரதம் இல்லாத பகுதிகள் கொண்ட நொதிகள் முழுநொதிகள் அழைக்கப்படுகின்றன.
முழு நொதியின் புரதப்பகுதி அபோ என்சைம்
முழு நொதியின் புரதம் அல்லாத பகுதி இணை நொதிகள்
அப்போ என்சைமுடன் தளர்வாக இணைக்கப்பட்ட பகுதி இணைநொதிகள்
நொதியின் பூட்டு சாவி கோட்பாட்டை கூறியவர் ஃ பிஷ்ஷர்
நொதியின் தூண்டப்பட்ட பொருத்த கோட்பாட்டை கூறியவர் கோஷ்லாண்டு

Comments

  1. Dear sir , pls update pdf file

    ReplyDelete
  2. Thank you sir,we need this in the format of pdf file

    ReplyDelete
  3. please update this to my mail

    ReplyDelete

Post a Comment