தாவரவியல் | பூஞ்சைகள்


பூஞ்சைகள்:
Ø  பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை.
Ø  பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜிஎன்று பெயர்.
Ø  பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
Ø  பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
Ø  மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்ககப் பொருள்களின் மீது வாழ்கின்றன. எடுத்துக்காட்டு; ரைசோபஸ், அகாரிகஸ்.
Ø  பூஞ்சையின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகின்றது.
Ø  மைசீலியங்கள் கிளைத்த, மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர். பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
Ø  மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
Ø  வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும்.
Ø  சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன. மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
Ø  முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
Ø  சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
Ø  பூஞ்சையினுடைய உடலம் மைசீலியம் எனப்படும். மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
Ø  ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்.

Comments