தாவரவியல் | வினா விடைகள்


Ø  சதைக்கனி பொதுவாக வெடிக்காது.
Ø  இருபுறவெடிகனிக்கு சிறந்த எடுத்துக்காட்டு லெகூம் தாவரங்கள்.
Ø  ஒரு மலரின் இணையாத பல சூலிலைகளைக் கொண்ட சூலகத்திலிருந்து உருவாகும் கனி திரள்கனியாகும். எடுத்துக்காட்டு : நெட்டிலிங்கம்.
Ø  கருவுற்ற சூல், விதை எனப்படுகிறது.
Ø  ஓர் மின்னணு உருப்பெருக்கி நுண்பொருளை 2 லட்சம் முதல் 3 லட்சம் மடங்குகள் பெரிதாகக் காட்டும்.
Ø  நுண்ணோக்கிகளின் முக்கிய லென்சுகள், கண்ணருகு லென்சு, பொருளருகு லென்சு என்று இரண்டு வகைப்படும்.
Ø  செல்கோட்பாட்டை வெளியிட்டவர் ஸ்லீடன், ஸ்வான்.
Ø  செல், புரோட்டோபிளாசம் மற்றும் பிளாஸ்மா படலத்தால் ஆனது.
Ø  செல்சுவர் செல்லுலோசால் ஆனது.
Ø  விலங்கு செல்களில் பிளாஸ்மா படலம் புற எல்லையாக அமைந்துள்ளது. இது கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆனது.
Ø  கோல்கை உறுப்புகள் சுரப்பி செல்களில் காணப்படும்.
Ø  ரைபோசோம் புரதம் தயாரித்தலில் காணப்படும்.
Ø  மைட்டோ காண்ட்ரியா ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது.
Ø  சென்ட்ரோசோம் செல்லின் தற்கொலைப் பைகள்என்று அழைக்கப்படுகிறது.
Ø  உட்கரு உள்ள செல்களுக்கு யூகேரியோட் செல்கள் என்று பெயர். இவற்றின் அமைப்பினை ராபர்ட் பிரவுன் கண்டுபிடித்தார்.
Ø  உட்கருவில் செல் பிரிதல் மூலமாகவே செல்கள் உருவாகின்றன.
Ø  உட்கருவில் செல் பிரிதலில் காரியோகைனசிஸ், சைட்டோகைனசிஸ் என இரண்டு நிலைகள் உண்டு.
Ø  தாவரங்களில் வைரஸ் நோய்கள்: வாழையின் உச்சிக் கொத்து நோய், உருளையின் இலைச் சுருள் நோய், புகையிலையின் பல வண்ண இலை நோய்.
Ø  தாவரங்களில் பாக்டீரியா நோய்கள்: காரட்டில் மென் அழுகல் நோய், நெல்லின் பாக்டீரிய வெப்பு நோய்.
Ø  தாவரங்களில் பூஞ்சை நோய்கள்: கடுகுக் குடும்பத் தாவரங்களில் வெண்துரு நோய், கோதுமையில் கருத்துரு நோய், கரும்பில் செவ்வழுகல் நோய், உருளைக் கிழங்கில் பின்தோன்று வெப்பு நோய்.
Ø  முள்ளங்கியில் வெண்துரு நோய் அல்புகோ காண்டிடா என்னும் பூஞ்சையினால் உருவாகிறது.

No comments:

Post a Comment