அறிவியல் | வினா விடைகள்,


Ø  விலங்குகள் பலசெல் கொண்டவை.
Ø  பச்சைய நிறமி இல்லை. ஆனால், வேறுபட்ட நிறமிகளைக் கொண்டது.
Ø  உணர் உறுப்பு, நரம்பு மண்டலம் கொண்டவை.
Ø  செல் சுவர் இல்லை. ஆனால், செல்லைச் சூழ்ந்து செல் சவ்வு அல்லது பிளாஸ்மாலெம்மா காணப்படுகிறது.
Ø  யூக்ளினாவைத் தவிர மற்ற விலங்குகளில் கணிகங்கள் இல்லை.
Ø  பெரும்பாலும் விலங்குகள் திட உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ளும், உணவூட்ட முறை ஹோலோஸோயிக் ஆகும்.
Ø  சேமிப்பு உணவாக கிளைக்கோஜன் காணப்படும்.
Ø  பவளப்பூச்சிகள், கடற்பஞ்சு இவற்றைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் உணவுக்காக இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடையவை.
Ø  யூரோட்ராபின் எனும் முக்கிய மருந்துப் பொருள் எந்த வினையின் போது கிடைக்கிறது - பார்மால்டிஹைடு அம்மோனியாவுடன் குறுக்க வினைபுரியும்போது கிடைக்கிறது.
Ø  மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருட்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி.
Ø  அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் - வினிகர்.
Ø  வினிகரில் எத்தனை சதவீதம் அசிட்டிக் அமிலம் இருக்கிறது - 6 - 10 சதவீதம்.
Ø  மண் வளத்திற்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய முதன்மை ஊட்டச் சத்துக்களை அளிக்கும் வேதிப் பொருட்கள் - செயற்கை உரங்கள் எனப்படும்.
Ø  பெட்ரோல், டீசல், உற்பத்திவாயு, கரிவாயு, மரக்கரி போன்றவை - இரண்டாம் நிலை எரிபொருள்.
Ø  புரோப்பேன், பியூட்டேன், ஐசோ - பியூட்டேன், பியூட்டிலின் முதலிய ஹைட்ரோ கார்பன்களில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் கலந்துள்ள கலவைக்கு என்ன பெயர் - எல்.பி.ஜி.
Ø  குளோரோபார்ம், ஈதர்கள், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை - மயக்கமூட்டிகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
Ø  மனநோயினை குணப்படுத்த பயன்படும் அமிலம் - பார்மிடியூரிக் அமிலம்.
Ø  மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படும் மருந்து - பென்சிலின்.
Ø  நட்சத்திரங்கள் தானாகப் பிரகாசிக்கும் தன்மை உடையன.
Ø  பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன். பகலில் தெரியும் ஒரே நட்சத்திரம் சூரியன்.
Ø  வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் தொலைவை அளக்க ஒளி ஆண்டு என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
Ø  ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
Ø  ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. தூரம் செல்கிறது.
Ø  சூரியனின் ஒளி புவியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
Ø  சூரிய குடும்பத்திற்கு அருகாமையில் உள்ள நட்சத்திரம் - ஃபிராக்ஸியா செட்னாரி.
Ø  சூரியக் குடும்பம் உள்ள அண்டத்தைப் பால்வழி அண்டம் என்று குறிப்பிடுகின்றோம்.
Ø  பால்வழி அண்டமானது சுருள் போன்ற அமைப்பைக் கொண்டது.
Ø  1994 ஆம் ஆண்டு ஷுமேக்கர் லெவி என்ற வால் நட்சத்திரம் வியாழன் கோள் மீது மோதியது.
Ø  சூரியன் பூமியை விட சுமார் 109 மடங்கு பெரியது.
Ø  சூரியன் பூமியில் இருந்து 149 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது.
Ø  சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை - 6000 டிகிரி செல்சியஸ்.
Ø  சூரியனின்  மையப் பகுதியின் வெப்பநிலை 1 லட்சம் டிகிரி செல்சியஸ்.
Ø  சூரியனின் அதிகமான வெப்பம் அதன் அணுக்கரு இணைப்பின் மூலம் பெறுகின்றன.
Ø  சூரியனில் உள்ள இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும்போது அதிக வெப்பம் வெளிப்படுகின்றது.
Ø  சுற்றுப்புறச் சூழலிலிருந்து ஆற்றலை ஈர்த்து, தன்னுடைய உடற்செயல்களுக்காக அதை பயன்படுத்துவதால் ஒவ்வொரு உயிரினத்தையும் ஒரு ரசாயன தொழிற்சாலை என்கிறோம்.
Ø  சூரியசக்தியானது பூமிப்பரப்பை அடைவதற்குள் குறைந்த அலைநீளம் உடைய கதிர்வீச்சுகள் தடுக்கப்படுகின்றன.
Ø  சூரியசக்தியில் 1 சதவீதம் தான் பூமியின் வளிமண்டல மேற்பரப்பை அடைவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Ø  பூமிப்பரப்பில் விழும் பெரும்பான்மையான சூரிய சக்தி, நம் கண்ணுக்கு புலப்படும் சூரிய ஒளிதான்.
Ø  சூரியக் கதிர்வீச்சு அளவைக் கணக்கிட இயலாது. சுமாராக அது 1372 வாட்ஸ்/மீ இருக்கலாம்.
Ø  57 சதவீதம் சூரிய ஒளி வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுகிறது. 53 சதவீதம் நிலப்பரப்பையும், நீர்ப்பரப்பையும் வெப்பப்படுத்த செலவிடப்படுகிறது. மீதமுள்ள 8 சதவீதம் சூரிய ஒளி ஆற்றலே தாவரங்களை சென்றடைகின்றன.
Ø  ஒரு சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டமானது ஒரு முகப்பாதையில் செல்லக்கூடிய சுழற்சியற்ற வினையாகும்.
Ø  உயிரின தொகுப்புகளிடையே காணப்படுகின்ற ஒரு வழிப்போக்கான ஆற்றல் ஓட்டத்தில் வெப்ப இயக்கவியலின் இருவிதிகள் நிரூபணமாகின்றன.
Ø  வெப்ப இயக்க ஆற்றலின் முதல் விதியின்படி ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.
Ø  உயிர்ப் பொருள்களின் உலர் எடையின் அடிப்படையில் அமையும் கோபுரங்கள் உயிர்ப் புலக் கோபுரங்கள் எனப்படுகின்றன.
Ø  புல்வெளி மற்றும் காடு போன்ற சூழ்நிலைத் தொகுப்பில் உற்பத்தியாளர்கள் மட்டத்திலிருந்து உயிர் நுகர்வோர் மட்டம் நோக்கிச் செல்லச் செல்ல உயிர்ப்புலம் படிப்படியாகக் குறையும்.

Comments