தமிழ் இலக்கியம் | முக்கிய வினா விடைகள்


தமிழ் இலக்கியம்  | முக்கிய  வினா விடைகள்
•    ஓவியக் கலைக்கு மற்ற பெயர்கள்: ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.
•   ஓவியக் கலைஞர்களின் மற்ற பெயர்கள்: ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்.
•    ஓவியக் கலைஞரின் குழுவின் பெயர் - ஓவிய மாக்கள்; ஆண் ஓவியர் - சித்திராங்கதன், பெண் ஓவியர் - சித்திரசேனா.
•    ஓவியம் வரையும் இடம்: சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.
•    அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் அகரமுதலி என வழங்கப்படுகிறது.
•    தமிழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும்.
•    நிகண்டுகளின் பழமையானது - சேந்தன் திவாகரம்.
•    சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் - திவாகரர்.
•    மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை - 25
•    நிகண்டுகளின் சிறப்பானது - சூடாமணி நிகண்டு
•    சூடாமணி நிகண்டுவை இயற்றியவர் - மண்டலப்புருடர்
•    வீரமாமுனிவர் தொகுத்த சதுரகாதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
•    சதுரகாதி வெளிவந்த ஆண்டு - கி.பி.1732.
•    சதுரகாதியில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
•    தமிழ் - இலத்தீன் அகராதி, இலத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி, போர்த்துக்கீசிய - இலத்தின் தமிழ் அகராதி ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர் வீரமாமுனிவர்.
•    தமிழ் - தமிழ் அகராதி லெவி - ஸ்பால்டிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
•   அபிதான கோசம் என்பது தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902ஆம் ஆண்டு வெளியானது.
அபிதான சிந்தாமணி - இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தொகுத்து வெளியிட்டவர் சிங்காரவேலனார்.
பொது அறிவு, உளவியல், புவியியல், புள்ளியியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கு கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டன. மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
•    அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Comments

  1. சங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature

    ReplyDelete

Post a Comment