இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு:


இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு:

வேலு நாச்சியார்:
•    ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
•    பெற்றோர் - செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள்
•    பிறப்பு - கி.பி.1730

கடலூர் அஞ்சலையம்மாள்:
•    கடலூரில் 1890ஆம் ஆண்டு முதுநகரில் பிறந்தார்.
•    1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதுதான் அஞ்சலையம்மாள் தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
•   நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டவர்.
•    ‘தென்னாட்டின் ஜான்சிராணிஎன்று காந்தியடிகளால் புகழப் பெற்றவர்.

அம்புஜத்தம்மாள்:
•   1899ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்.
•   வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
•   தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.

No comments:

Post a Comment