தாவரவியல் | மகரந்தச் சேர்க்கை


மகரந்தச் சேர்க்கை:
Ø  தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஆட்டோகாமி எனப்படும். பூவின் மகரந்தங்கள் அதே பூவில் உள்ள சூலகமுடியை சென்றடைவதற்கோ அதே தாவரத்தைச் சேர்ந்த மற்றொரு பூவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தன் மகரந்த சேர்க்கை எனப்படும்.
Ø  ஒரு பூவின் மகரந்தம் மற்றொரு தாவரத்தின் பூவில் உள்ள சூலகத்தை சென்றடைவதோ அல்லது அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தை சென்றடைவதோ அயல் மகரந்தச் சேர்க்கை அல்லது அல்லோகாமி எனப்படும்.
Ø  பெரும்பாலான இருபால் மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கையை விட அயல் மகரந்தச் சேர்க்கை பொதுவாக நடைபெறுகிறது.
Ø  அயல் மகரந்தச் சேர்க்கை விளைவாக உருவாகும் விதைகள் யாவும் முளைக்கும் திறன் மற்றும், திடமான தாவரங்களாக வளரும் தன்மையை பெற்றிருக்கும்.
Ø  விலங்குகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை சூபில்லி எனப்படும். இத்தகைய மலர்கள் சூபில்லஸ் மலர்கள் எனப்படும்.
Ø  பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை அடையும் தாவரங்களில் தெளிவாக வெளிப்படும் விதத்தில் மலர்கள் வண்ணத்தையும், நல்ல நறுமணத்தையும் பெற்றிருக்கும். பூவரசு முதலிய தாவரங்களில் இந்த இரண்டு பண்புகளும் உள்ளன.
Ø  காற்றினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள் அனிமோபிலஸ் மலர்கள் எனப்படும்.
Ø  னஹடிரில்லா, வாலிஸ்நீரியா போன்ற நீர் வாழ் தாவரங்களில் நீரின் வழி மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. வாலிஸ் நீரியா நீரில் மூழ்கி வளரும் ஈரில்லத் தாவரம். இவற்றில் இலையானது ரிப்பன் வடிவத்தில் இருக்கும்.
Ø  இருபால் மலர்களில் மகரந்தத்தூள்களும், சூலகமும் ஒரே நேரத்தில் முதிர்வடைவதால் தன் மகரந்தச்சேர்க்கைக்கு வாய்ப்புள்ளது.

Comments