உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

UGC NET | Education Paper II | WESTERN SCHOOL OF PHILOSOPHY

WESTERN SCHOOL OF PHILOSOPHY:
by
Krithika.S and Kalaivani.M
Assistant Professors in Physical Science, Dr.G.R.Damodaran College of Education at Sulur in Coimbatore.
  1. Naturalism, 
  2. Idealism 
  3. Pragmatism with reference to concept of knowledge, reality, values their educational implications for aims, contents and methods of education

Nobel Prizes 2013 | The Nobel Prize in Physiology or Medicine 2013 | நோபல் பரிசு 2013: மருத்துவம்

உயிருள்ளவைகளின் அடிப்படையாக விளங்குவது செல்கள். செல்லின் உள்ளே உட்கரு, மைட்டோ காண்டிரியா, ரிபோசோம், லைசோசோம், கோல்கை உறுப்புகள், செண்ட்ரியோல்கள் போன்ற முக்கியமான உள்ளுறுப்புகள் மற்றும் சைட்டோபிளாச திரவம் ஆகியவை செல் சவ்வினால் சூழப்பட்டிருக்கும். செல்லின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றும் முக்கிய பணியினை செய்யக்கூடியவை. ஒற்றை செல் வகையான புரோகார்யோடிக் செல்வகையினைக் காட்டிலும் விலங்கு செல்லான யூகார்யோடிக் செல்வகை மிகவும் சிக்கலா னவை. யூகார்யோடிக் செல்லின் உட்பகுதி சிக்கலான அறைகளால் ஆனது. அதன் அறைக்குள்ளிருக்கும் உள்ளுறுப்புகளுக்கு தேவைப்படும் புரோட்டீன் பொருட்களை கொண்டு சேர்க்கவும், அவை வெளியேற்றும்  கழிவுப்பொருட்களை செல்லுக்கு வெளியே விட்டுவிடு கின்ற போக்குவரத்து அமைப்பு வெசிகிள் போக்குவரத்து அல்லது குமிழ்போக்குவரத்து அமைப்பாகும்.

Nobel Prizes 2013 | The Nobel Prize in Chemistry 2013 | நோபல் பரிசு 2013: வேதியியல்

வேதிவினைகள் நிகழ்வதனை வெற்றுக்கண்களால் பார்க்க முடியாது. மூலக்கூறு நிலையில் நிகழும் வேதிவினை நிகழ்வுகள் மிக நுட்பமானது சிக்கலானது, அதே சமயம் படிப்படியாக மாற்றம் பெறும் நிகழ்வு.

வேதியியல் ஆய்வுக் கூடங்கள் இன்று சோதனைக் குழாய்களையும், உபகரணங்களையும் கொண்டு வேதியியல் ஆய்வுகளை நிகழ்த்தும் காலம் போய், கணினியில் வேதிப்பொருட்களின் சமன்பாடுகளை பதிவு செய்தால் வேதியியல் வினைகளின் அத்தகைய தகவல்களும் மிகத்துல்லியமாக கிடைக்கும் நிலை வந்துவிட்டது. வேதிவினைகளை ஆய்வகங்களிலிருந்து கணினிகளுக்கு மாற்றிய பெருமை மார்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட் மற்றும் ஏரி வார்செல் ஆகிய மூன்று பேரையே சாரும். 1970-ஆம் ஆண்டுகளில் இம்மூவர் உருவாக்கிய வேதிவினைகளின் கணினி மென்பொருளுக்கு (Software Program) 2013 ஆண்டுக்கான வேதியியல் பிரிவில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.